கிரகதோஷப் பரிகாரக் கோயில்கள் - 4: புதன் அருள் புரியும் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்!

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் (Thiruvenkadu Swetharanyeswarar Temple) தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. சீர்காழியிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
Thiruvenkadu Swetharanyeswarar Temple - Kiragathosa parihara kovilgal
Thiruvenkadu Swetharanyeswarar Temple
Updated on
deepam strip
Deepam

இன்றைக்கு புதன் கிழமை. புதன் கிரகம் அருள் புரியும் ஆலயத்தை தரிசிப்போம்.

புதன் கிரக தோஷப் பரிகாரத் தலமான திருவெண்காட்டுக்கு சிறப்புகள் பல உண்டு. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. காசிக்குச் சமமானதாகத் திகழும் ஆறு தலங்களுள் இதுவும் ஒன்று. சிவ மூர்த்தம், சக்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மும்மூன்றாக இங்கே திகழ்கின்றன!

சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற அற்புதத் தலம். ஐம்பத்தோரு சக்தி பீடங்களுள் ஒன்று. சிவபெருமானின் அறுபத்து நான்கு மூர்த்தங்களுள் ஒன்றான ஸ்ரீஅகோராஸ்திர மூர்த்தியை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.

வெளிப் பிராகாரத்தில் சிறு கோபுரத்துடன் கிழக்கு நோக்கி பிரம்ம வித்யாம்பிகை அம்பாள் அருள்கிறாள். சந்நிதியின் உட்பிரகாரத்தில் பிள்ளை இடுக்கி அன்னையும், சுக்ரவார அன்னையும் அருள்பாலிக்கிறார்கள்.

யார் அவர், ‘பிள்ளையிடுக்கி‘ அன்னை’?

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com