கிரகதோஷப் பரிகாரக் கோயில்கள் - 5: குரு (வியாழன்) அருள் பெற... ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்!

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் (Alangudi Apatsahayesvarar Temple) தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும், நீடாமங்கலம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
Alangudi Apatsahayesvarar Temple - Kiragathosa parihara kovilgal
Alangudi Apatsahayesvarar Temple
Published on
deepam strip
Deepam

இன்றைக்கு வியாழக்கிழமை. குரு பகவானுக்கு உகந்த நாள். குரு பகவானின் அருளைப் பெறவும், அவரால் ஏற்பட்டிருக்கக் கூடிய தோஷம் நீங்கவும், கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ள ஆலங்குடியில் அவரது கோயிலுக்குச் சென்று தரிசிப்போம், வாருங்கள்.

அமுதம் கடைந்த போது வெளிப்பட்ட விஷத்தினால் அவதியுற்ற தேவர்கள், சிவபெருமானை மனமுருகி வழிபட, ஆலமாகிய விஷத்தைக் குடித்து அகில உலகையும் காத்தார் ஈசன். அதனால் இத்திருத்தலத்துக்கு ஆலங்குடி எனவும், இறைவனுக்கு ஆபத்சகாயர் எனவும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

கோயிலில் நுழைந்ததும் ‘கலங்காமல் காத்த விநாயகர்’ தரிசனம் நல்குகிறார். கஜமுகாசுரனால் தேவர்களுக்கு நேர்ந்த இடுக்கண்களைக் களைந்து காத்தமையால் இவருக்கு இந்தப் பெயர். முதல் பிராகாரத்தில் சுக்கிரவார அம்மன் சந்நிதியையும், அருகிலேயே, கோயிலின் நாயகி, ஏலவார் குழலியம்மையின் சந்நிதியையும் காணலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com