Thirukanjanur Agneeswarar Temple - Kiragathosa parihara kovilgal
Thirukanjanur Agneeswarar Temple

கிரகதோஷப் பரிகாரக் கோயில்கள் - 6: சுக்கிரன் (வெள்ளி) வழிபாடு - திருக்கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்!

திருக்கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (Thirukanjanur Agneeswarar Temple) தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும், சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
Published on
deepam strip
Deepam

இன்று வெள்ளிக் கிழமை. வெள்ளி என்று சொல்லப்படும் சுக்கிர பகவானை வழிபடுவதற்கு உகந்த நாள். திருக்கஞ்சனூர் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் அவரை தரிசிக்கலாமா? கும்பகோணத்திலிருந்து 16 கி.மீ; சூரியனார் கோயிலிலிருந்து 2 கி.மீ.

ஒருமுறை, பராசர முனிவர் மனநிலை பிறழ்ந்து பெரிதும் துயருற்றார். அப்போது ஓர் அசரீரி வழிகாட்டலில், அவர் பலாசவனம் என்ற தலத்துக்கு வந்தார். இங்கே பரமசிவனைப் பூஜித்தார். சிவபெருமான், உமாதேவியோடு தாண்டவக் கோலத்தில் தீப்பிழம்பாகக் காட்சியளித்து, முனிவரின் மனச் சிதைவை நிவர்த்தி செய்தார். பரவசமடைந்த பராசரர், பரமசிவன் அதே தாண்டவக் கோலத்தில் அத்திருத்தலத்தில் எழுந்தருளி, ஏனைய பக்தர்களுக்கும் காட்சியளிக்க வேண்டுமென கோரினார். இறைவனும் அவ்வாறே அருள் புரிந்து பராசரருக்கு முக்தி அளித்தார். அந்தப் புனிதத்தலமே, பலாசவனம் என்ற திருக்கஞ்சனூர்.

இங்கே காவிரி, உத்தரவாஹினி என்ற வடகாவேரியாக ஓடுகிறது. இதில் ஒருமுறை நீராடினால் கங்கை நதியில் பன்னிரண்டு ஆண்டுகள் நீராடிய பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com