

சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களின் பாதிப்புகளிலிருந்து நிவர்த்தி பெற ஏழு கோயில்களை தரிசித்தோம். இப்போது ராகு மற்றும் கேது கோயில்களில் முதலில் ராகுவுக்கு உரிய தலமான திருநாகேஸ்வரத்திற்குச் செல்வோம். கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ.
தன் மகன் சுகர்மனை நாக அரசனான தக்ககன் தீண்டியதை அறிந்த சுசீலர் என்ற முனிவர், கோபத்துடன் தக்ககனை மானிடனாகப் பிறக்குமாறு சபித்தார். சித்தம் கலங்கிய தக்ககன், சாபவிமோசனம் பெற, காஷ்யப முனிவரை அணுகினான். பூலோகத்தில் லிங்கப் பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டால் சாபம் நீங்கும் என முனிவர் அருளினார். அவ்வாறே செய்தான் தக்ககன். சிவபெருமான் அவனுக்குக் காட்சி தந்து சாபவிமோசனம் அருளினார். இவ்வாறு அவன் வழிபட்ட ஈசன்தான் இத்தல மூலவரான நாகநாதர். கருவறையில் இவர் லிங்க வடிவில் காட்சி அருள்கிறார்.