

இன்று கேது தோஷ பரிகார தலமாகிய கீழப்பெரும்பள்ளம் கோயிலை தரிசிப்போம். மயிலாடுதுறையிலிருந்து 24 கி.மீ.
மந்தாரமலையை மத்தாகவும், வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைந்தனர். வலி பொறுக்காத வாசுகி நஞ்சைக் கக்கியது. நஞ்சினைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானை அண்டினர். சிவபெருமானும் அந்நஞ்சினை எடுத்து உண்டார். இதற்கிடையில் பாற்கடல் தந்த அமுதத்தை மோகினி (மஹாவிஷ்ணு) தேவர்களுக்கு மட்டும் அளித்தார். ஆனால் ஸ்வர்ணபானு என்ற அசுரன், தேவ வடிவெடுத்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவே அமர்ந்து அமிர்தத்தை வாங்கி உண்டான். இந்த சூழ்ச்சியை சூரியனும் சந்திரனும் மோகினிக்குச் சொல்லிவிட, உடனே மோகினி கையில் வைத்திருந்த கரண்டியால் அசுரனின் தலையில் ஓங்கி அடித்தாள். அசுரனின் தலை வேறாகவும், உடல் வேறாகவும் விழுந்தன. மனிதத் தலை மற்றும் பாம்பு உடலுடன் கருநிற ராகுவாகவும், ஐந்து தலை நாகம் மற்றும் மனித உடலுடன் செந்நிற கேதுவாகவும் இரு வடிவங்கள் தோன்றின. பின்னர் ராகுவும், கேதுவும் தவம் இயற்றி, ஈசன் அருளால் நிழல் கிரகங்களாகப் பதவி பெற்றனர்.