நவரத்தினங்களில் தலைசிறந்த மாணிக்கத்தின் மகத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்!

Ruby Stone
Benefits of Ruby StoneImage Credits: Freepik

வரத்தினங்கள் ஒன்பது வகைப்படும். முத்து, பவளம் தவிர்த்து மற்ற ஏழு கற்களான வைரம், மாணிக்கம், நீலம், மரகதம், கோமேதகம், புஷ்பராகம், வைடூரியம் ஆகியவை பூமியிலிருந்து நமக்கு கிடைக்கிறது. முத்து, பவளம் கடலிலிருந்து கிடைக்கிறது. இந்த நவரத்தினங்களை நாம் அணிவதன் மூலம் அது நம் குறைகளை நீக்கி நமக்கு மேன்மையை தருகிறது. இன்று ‘நவரத்தினங்களின் அரசன்’ என்று அழைக்கப்படும் மாணிக்கத்தின் பலன்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

நவரத்தினங்களில் மாணிக்கம் மிகவும் விலையுயர்ந்த ரத்தினமாகும். இதற்கு ‘பதுமராகம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது பர்மா,இலங்கை, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும், இந்தியாவில் காஷ்மீரிலும், ஆந்திர பிரதேசத்திலும் இந்த கற்கள் கிடைக்கின்றது. இந்த மாணிக்கத்தை பற்றி சிலப்பதிகாரமும், திருவிளையாடல் புராணமும் தெளிவாக கூறுகிறது. இதில் நான்கு வகை உண்டு செவ்வந்திகம், பதுமராகம், நீலக்கந்தி, குருவிந்தம் ஆகியனவாகும்.

மாணிக்கம் பார்ப்பதற்கு மாதுளம் பழத்தின் நிறத்தில் இருக்கும். சூரிய ஒளிக்கதிர் எப்படி நம் உடல்நலத்திற்கு பெரிதும் உதவுகிறதோ அதேபோல தான் சூரிய ஆதிக்கம் கொண்ட மாணிக்கம் நம்முடைய உடல்நல பிரச்சனைகளை போக்குகிறது.

இந்த கல்லை அணிவதன் மூலம், பெரிய பதவி அடைவதற்கு, வாழ்வில் பெரிய நிலைக்கு வர வேண்டும் என்று நினைப்போருக்கு பெரும் உதவியாக இருக்கும். அரசியலில் இருப்பவர்கள் இதை அணிவதால் மேன்மையான இடத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும்.

மாணிக்க கல்லை வாங்கும் போது பார்க்க வேண்டிய முக்கியமான விஷயங்கள், கல்லினுடைய  நிறம் நல்ல சிவப்பாக இருக்க வேண்டும், நல்ல நீரோட்டம் இருக்க வேண்டும், கல் உடைந்து போயிருக்க கூடாது, கரும்புள்ளிகள் நிச்சயம் இருக்க கூடாது. நல்ல மாணிக்க கல்லை அணியும்போது, நாம் நினைத்ததை அடைவதற்கான உத்வேகத்தை கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
குங்குலியத்தின் சூப்பர் பலன்களைத் தெரிஞ்சுக்கலாமா?
Ruby Stone

மாணிக்க கல்லை மோதிர விரலில் தங்கம் அல்லது வெள்ளியில் செய்து அணிந்து கொள்ளலாம். இது மனஅழுத்தம், இதய சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்யும். இளமையாக இருப்பதற்காகவும் மாணிக்க கல்லை அணிந்து கொள்ளலாம்.  இந்த கல்லை அணிவதன் மூலம் ஆற்றல் மிகுந்த வேலைகளை செய்வதற்கு சக்தியை கொடுக்கும்.

தொழில்துறையில் உள்ளவர்கள், அரசியலில் இருப்பவர்கள் இதை பயன்படுத்துவதால் நல்ல பலனை கொடுக்கும். நம்முள் இருக்கும் பயம், குழப்பம், தயக்கம், தூக்கமின்மை ஆகியவற்றை இது போக்கும். இந்த மாணிக்க கல் பயத்தை போக்கி பாசிட்டிவான நம்பிக்கையை நம்முள் விதைக்கும். 1,10, 19,28 இந்த எண்ணில் பிறந்திருந்தால், மாணிக்கத்தை பயன்படுத்தலாம். சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கத்தை பயன்படுத்தலாம். கார்த்திகை, கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் பயன் படுத்தலாம். சித்த மருத்துவத்திலும் மாணிக்கத்தை மருந்தாக பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com