கோவில்களின் நகரம் கும்பகோணம் ஓர் உலா!

கோவில்களின் நகரம் கும்பகோணம் ஓர் உலா!

1. ஆதி கும்பேஸ்வரர் கோவில்: 

ப்பர், சம்பந்தரால் பாடல் பெற்ற சிவஸ்தலம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறும். தேவார பாடல் பெற்ற 26 ஆவது சிவஸ்தலம். கல் நாதஸ்வரம் உள்ள பெருமை இக் கோவிலுக்கு உண்டு. உலகிற்கு ஆதி காரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியதால் ஆதி கும்பேஸ்வரர் என்றும், இறைவி மங்களாம்பிகை மந்திர பீடேஸ்வரியாக சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குகிறாள். கும்பேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் மற்றும் சன்னிதிகள் சில கோவிந்த தீட்சிதரின் முயற்சியால் கட்டப்பட்டது.

2. நாகேஸ்வரர் கோவில்:

ரகாசுரன், சூரியன் ஆகியோர் வழிபட்ட தலம். சூரியன் வழிபட்ட  இத்தலத்தில் இன்றும் சித்திரை மாதம் 11 ,12 ,13 ஆகிய தேதிகளில் சூரிய கிரகணங்கள் மூலவரின் மீது நேராக விழுவதை காணலாம். தேவார பாடல் பெற்ற 27 வது சிவஸ்தலம் ஆகும். இறைவன் பெயர் நாகநாதர், இறைவி  பிருகன் நாயகி (பெரிய நாயகி). தலவிருட்சம் வில்வம் , தீர்த்தம்-நாகதீர்த்தம். மிகவும் பழமையான கோவில் இது. நாகம் இறைவனை வழிபட்டதால் நாகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

3. மகாமக குளம்:

பிரளயத்தின்போது உயிர்களை உருவாக்கும் விதைகளையும் அமிர்தமும் கொண்ட பானை ஒன்று இங்கே இந்த குளத்தில் இருப்பதற்காக இங்கு வந்து சேர்ந்தது. சிவபெருமான் ஒரு வேடன் வேடமிட்டு அம்பெய்தி இந்த பானையை உடைத்து உயிர்கள் ஜனிப்பதற்கு வழி செய்தார். கும்பம் என்றால் பானை கோணம் என்றால் உருக்குலைந்து போவது என பொருள் பட கும்பகோணம் என பெயர் பெற்றது. 6.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளம் இது. இதனைச் சுற்றி 16 மண்டபங்களும் 21 கிணறுகளும் உள்ளன. 16 மண்டபங்களையும் படிகளையும் அமைத்தவர் தஞ்சாவூரைச் சார்ந்த ரகுநாத நாயக்கரின் படைத்தலைவர் கோவிந்த தீட்சிதர்.  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

4. காசி விஸ்வநாதர் கோவில்:

காமக குளத்தின் வடகரையில் அமைந்துள்ள ஈசன் கோவில் இது. கங்கை, சரயு, கிருஷ்ணா, துங்கபத்ரா, கோதாவரி, காவேரி, சரஸ்வதி, நர்மதா, யமுனா முதலிய நவ கன்னியர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் காசியில் இருந்து அவர்களுடன் வந்து இங்கு தங்கினார். அதனால் காசி விஸ்வநாதர் என பெயர் பெற்றார். இத்தலத்தில் நவ கன்னியர்களின் சிலை அவரவர் நிலத்தின் முக பாவனையுடன் அமைந்த திருமேனிகளுடன் உள்ளது. விசாலாட்சி அம்பாள் தென் திசை நோக்கி வீற்றிருக்கிறாள். ஈசனின் பாணம் சுயம்பு. பாணத்தில் கண்கள், காது ,மூக்கு போன்ற அவயங்கள் அமைய பெற்றிருப்பது தனிச்சிறப்பாகும்.

5. சாரங்கபாணி கோவில்:

108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படும் தலம் இது.ஆராவமுதன், கோமளவல்லி தாயார். மிகவும் பழமை வாய்ந்த கோவில் இது. ஆழ்வார்களால் பாடப்பெற்ற ஸ்தலம். இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பை கொண்டுள்ளது .இதில் குதிரைகள், யானைகள், சக்கரங்கள் ஆகியவை கல்லினால் ஆனவை. கோவிலின் மற்றொரு சிறப்பு கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருப்பதாகும்.சார்ங்கம் என்ற வில்லை கொண்டு உள்ளதால் சாரங்கபாணி என அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் உள்ள கோவில் தேர்களில் திருவாரூர் ஆழித்தேர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர், மூன்றாவதாக சாரங்கபாணி கோவில் தேர் பெரிய தேராக புகழ் பெற்றதாகும்.12 கருட சேவை விழா மிகச் சிறப்பாககொண்டாடப்படுகிறது.

6. சக்கரபாணி கோவில்:

பெருமாள் சக்கர வடிவமான தாமரைப் பூவில் அறுகோண எந்திரத்தில் எட்டு ஆயுதங்களை எட்டு திருக்கரங்களில் ஏந்தி காட்சி தருகிறார். சூரியன் பூஜித்ததால் இத்தலம் பாஸ்கர ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் சக்கரத்தை கரத்தில் ஏந்திய சக்கரராஜனுக்கு என்று அமைந்த ஒரே திருக்கோயில் இதுவாகும். விஜயவல்லி எனப்படும் சுதர்சனவல்லி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது.

       அட்சய திருதியை அன்று காலையில் 12  உற்சவ பெருமாள்களும்  கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடை தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளி கருட சேவை சாதிக்கின்றார்கள்.

7. இராமசுவாமி கோவில்:

கிபி 1600 முதல் 1645 வரை தஞ்சாவூரில் ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டது. ராமாயண ஓவியங்கள் மூன்று வரிசையாக இக்கோவிலில் வரையப்பட்டுள்ளன. கருவறையில் பட்டாபிஷேக கோலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகனன், அனுமார் இருக்கும் காட்சி நம்மை  மெய்சிலிர்க்க வைக்கும். பரதன் குடை பிடிக்க, சத்ருகனன் வெண்சாமரம் வீச, அனுமன் கையில் வீணையையும் சுவடியையும் ஏந்தி இருக்க பட்டாபிஷேக கோலத்தில் அழகு மிளிர எழுந்தருளி உள்ளனர்.

8. சுவாமிமலை: 

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடு இது. கும்பகோணத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தகப்பன் சுவாமி என புகழ் பெற்ற முருகன் சுவாமிநாதன் ஆக இருப்பதால் சுவாமிமலை என அழைக்கப்படுகிறது. குருமலை, கந்தா சலம், சிரகிரி,சிவன்மலை, திருவேரகம் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின் மீது கோவில் அமைந்துள்ளது. முருகனின் சன்னதிக்கு செல்ல தமிழ் ஆண்டுகள் 60ஐ குறிக்கும் வகையில் 60 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும் .கொடிமரம் அருகே நேத்திர விநாயகர் உள்ளார். இங்கு மயிலுக்கு பதில் இந்திரன் அளித்த யானை வாகனமாக உள்ளது.

9. ஐராவதேஸ்வரர் கோவில்:

தாராசுரம் ஊரில் உள்ள இக்கோவில் கிபி 12ம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது . யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட கோவில் இது .ஐராவதேஸ்வரர் பெரியநாயகி என்னும் தெய்வநாயகி அம்பாளுக்கு என்று தனி சன்னதி உள்ளது. 900 ஆண்டுகள் பழமையான இக்கோவிலை சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. கருவறையில் லிங்கத்தின் இருபுறமும் துவாரபாலவர்கள் காணப்படுவது வேறு எங்கும் இல்லாத அமைப்பாகும்.கோவிலின் வெளிச் சுவர்களில் மூன்று முகங்கள் எட்டு கைகளுடன் அர்த்தநாரீஸ்வரரும், குழலூதும் சிவனும் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பமாகும். 

10. பட்டீஸ்வரம்:

ங்குள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தேவலோக பசு காமதேனுவின் மகள் பட்டி இத்தலத்து இறைவனை பூஜித்ததால் பட்டீஸ்வரம் எனப்பட்டது. தேனுபுரீஸ்வரர் ,அம்பாள் ஞானாம்பிகை சன்னதிகள் உள்ளன. அம்மன் சன்னதியின் மண்டபத்தின் நடுவில் மேலே கல்லால் ஆன ஊஞ்சல் சங்கிலி உள்ளது. இது ஒரே கல்லால் ஆன சக்கரம் சுழலக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விசுவாமித்திரர் காயத்ரி சித்திக்கப்  பெற்று பிரம்மரிஷி பட்டம் இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தருக்கு வெயிலின் கடுமை தாக்காமல் இருக்க இத்தலத்து இறைவன் சிவ கணங்கள் மூலம் முத்து பந்தல் அளித்து அதன் நிழலில் சம்மந்தர் தன்னை தரிசிக்க வரும்படி செய்தவர்.

     இன்னும் பல பல கோவில்கள் கும்பகோணத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் நிறைய அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com