நீலக்கல் என்று சொல்லப்படும் Blue sapphire ஐ பார்க்கும் போதே இதன் வண்ணம் அனைவரையும் கவரக்கூடியதாக இருக்கும். நீல நிறக்கற்கள் இறை அருளை ஆகர்ஷிக்க கூடிய தன்மையை உடையது. இலங்கை, இந்தியா, அஸ்திரேலியா, பிரேசில் போன்ற நாடுகளில் நீலக்கல் அதிகமாக கிடைக்கிறது.
நவக்கிரகத்தில் நீலக்கல் சனிக்கு உரியதாகும். இதை அணிவதன் நோக்கம் வாழ்க்கையில் தடங்கல் நீங்குவதற்காகவேயாகும். இந்தக் கல்லை பாதுகாப்பிற்காகவும் அணியலாம். சனி நமக்கு சாதகமாக இருக்கிறதா அல்லது பாதகமாக இருக்கிறதா? என்பதை பார்த்து அணிய வேண்டியது மிகவும் அவசியம்.
கும்பம், மகரம் ராசிக்கு அடர்நிற நீலக்கல்லை பயன்படுத்தலாம். ரிஷபம், துலாம் ராசிகளுக்கு லைட் நீலக்கல்லையே பரிந்துரைக்கிறார்கள். ஜாதகத்தில் சனி திசை, சனி புத்தி, சனிப்பார்வை இருப்பவர்களும் அணியலாம். நீலக்கல்லை 3,5,8 கேரட் கூட போட்டுக்கொள்ளலாம். தடங்கல் நீங்குவதற்கு பெண்கள் Pendent வடிவில் கழுத்தில் போட்டுக்கொள்வார்கள். இந்த நீலக்கல்லை நடுவிரலிலே அணிய வேண்டும்.
எலும்பு சம்மந்தப்பட்ட நோய், நரம்பு சம்மந்தப்பட்ட நோய், இருதய குழாய் பிரச்சனைகளுக்காக அணியலாம். இது தோல் சம்மந்தமான நோய்யை குணப்படுத்துகிறது. சனியின் நீலக்கல்லை காரிய சித்திக்காக பயன்படுத்தலாம்.
நீலக்கல்லில் கரும்புள்ளி வருவது அரிது எனினும் பார்த்து வாங்குவது சிறப்பு. இந்தக் கல் உடையாமல் இருக்க வேண்டும். எப்போதுமே நவரத்தின கல் வாங்கும் போது இதையெல்லாம் பார்த்து கவனமாக வாங்குவது நல்லது. நீலக்கல்லை தங்கத்தில் செய்து அணிவதை விட வெள்ளியில் அணிவதே சிறந்தது. சனிக்கிழமையில் மேற்கு திசையை பார்த்து இந்த நீலக்கல்லை அணிவது சிறப்பானதாகும்.
இந்தக் கல்லை அணியும் நாளில் மற்றவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய்வதன் மூலம் நம்முடைய அதிர்ஷ்டத்தை இந்த கல் அதிகரித்து கொடுக்கும். இந்த கல்லை அணிந்துவிட்டு பலனை உடனேயே எதிர்ப்பார்க்க கூடாது. சனி பலனை மெதுவாகவே தரும். பூசம்,அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரம் சனியின் நீலக்கலை பயன்படுத்தலாம். ராகு காலம், எமகண்டத்தில் நீலக்கல்லை போட வேண்டாம். வளர்ப்பிறை, தேய்பிறை தினங்களில் இந்த கல்லை போடலாம்.
உடல் நோய், கடன் தொல்லை, திருமண தடை, தொழிலில் தடை, குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இது போன்ற காரணங்களுக்காக தான் நீலக்கல்லை பயன் படுத்துகிறோம். வாழ்க்கையில் ஒரு வேகமான வளர்ச்சி வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த நீலக்கல்லை நிச்சயமாக அணிந்து கொள்ளலாம்.