கிருஷ்ண பகவானின் வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்கும் 10 பாடங்கள்!

செப்டம்பர்-6 கிருஷ்ண ஜயந்தி!
கிருஷ்ண பகவானின் வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்கும் 
10 பாடங்கள்!
Published on

வாழ்க்கையில் எழும் பிரச்சனைகளுக்கு தனது உபதேசங்கள் மூலம் தீர்வு சொன்ன கிருஷ்ண பகவான், தன் வாழ்க்கை மூலம் நமக்கு சிறந்த வாழ்வியல் வழிமுறைகளை தெளிவுபடுத்துகிறார். அவற்றில் சில எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவை.

1. ங்களுக்கு எதில் விருப்பமோ அதை செய்யுங்கள். அதை ஒருபோதும் கை விடாதீர்கள். கிருஷ்ண பகவானுக்கு புல்லாங்குழல் என்றால் அவ்வளவு பிடிக்கும். அதை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். அதை அவ்வப்போது வாசிப்பார். போர் போன்ற இக்கட்டான சூழ்நிலையில்கூட அதை அவர் தன்னுடனேயே  அருகில் வைத்திருந்தார்.

     2. பொழுதுபோக்கும், ஹாபியும் ஒவ்வொருவருக்கும் அவசியம். அது ஒருவரின் வாழ்வில் புதிய வெளிச்சம் வர உதவுகிறது. அதை ஒருபோதும் கை விடாதீர்கள். உங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கு ஒன்றை தேர்ந்தெடுங்கள். அதில் ஆர்வம் கொள்ளுங்கள், உங்களுக்குள் புதைந்து கிடக்கும் ஆற்றல்களை வளர்க்க உங்களுக்கு நீங்களே ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

    3.  ங்கள் உடன் இருப்போருக்கு தேவை அறிந்து அவ்வப்போது உதவுங்கள். பிருந்தாவனத்தில் ஒரு முறை மக்கள் தெரியாமல் விஷம் சாப்பிட்டு அவதிப்பட்ட போது கிருஷ்ணர் தாமாகவே வந்து உதவி அவர்களை காப்பாற்றினார். அப்பொழுது கிருஷ்ணரை யார் என்று கூட அப்பகுதி மக்களுக்கு தெரியாது. எந்தவொரு பிரதிபலனும் பார்க்காமல் கிருஷ்ணர் தன் தெய்வீக அன்பை வெளிப்படுத்தினார். அதை நீங்களும் பின்பற்றினால் மகிழ்ச்சி கூடும். வெற்றியின் சாவி அதுதான்.

   4. கிருஷ்ணருக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும், என்ன நடக்கப்போகிறது என்பது நன்கு தெரியும். அனைத்தும் தெரிந்தும், அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல், நிகழ்காலத்தில் நடக்க வேண்டியதில் மட்டும் கவனம் செலுத்தினார். நீங்களும் நிகழ்காலத்தில் மட்டும் நடக்க வேண்டியதில் மட்டும் கவனம் செலுத்தி கடமையை செய்யுங்கள், கவலை வேண்டாம்.

5. ரு முறை கிருஷ்ண பக்தர்களை இந்திரன் கொடுமைபடுத்தி வந்தான். ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர்களை அழிக்கவும் முயன்றான். அந்த நேரத்தில் கிருஷ்ணர் தலையிட்டு அவர்களை காப்பாற்றினார். இந்திரனையும்  மன்னித்தார் . நம்மை சுற்றி இருப்பவர்களும் அவ்வப்போது தவறு செய்கிறவர்கள்தான். அவர்களை மன்னியுங்கள். அவர்கள் தங்களின் தவறை உணர்ந்து திருந்த ஒரு வாய்ப்பு தாருங்கள். தண்டிக்காதீர்கள்.

6. கிருஷ்ணர் ஒரு அவதாரம்; அவரிடத்தில் இல்லாத சக்திகளே கிடையாது தான். ஆனால், அவர் அவரைவிட மூத்தவர்களை, அறிவாளிகளை மதித்தார்.  அவர்களிடம் அன்பும், பரிவும் காட்டினார். எல்லோரையும் மரியாதை செய்தார். அதை நீங்களும் பின்பற்றுங்கள்.

7. கிருஷ்ணர் பிறந்தபோதிலிருந்து எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார். ஆனால், அவர் முகத்தில் எப்போதும் சோகத்தை காட்டியதில்லை. எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன்தான் இருப்பார். மகிழ்ச்சி என்பது நம்மிடம் இருந்து வருவது என்பதில் தெளிவான எண்ணம் கொண்டவர் அவர். எனவே எப்போதும் புன்சிரிப்புடன் இருக்க பழகுங்கள். உங்கள் சோகத்தை முகத்தில் காட்டாதீர்கள்.

8. ளம் பருவத்தினர் முதல் வயதானவர் வரை தன்னுடன் நட்பு பாராட்டியவர்களை கிருஷ்ணர் எந்தளவுக்கு மரியாதை கொடுத்தார், மரியாதை செய்தார் என்பதை நாம் அறிவோம். நாம் எந்தளவுக்கு நட்பு பாராட்டி வருகிறோமோ, அந்தளவுக்கு மகிழ்ச்சியும், வளமும் நம் வாழ்வில் அதிகரிக்கும்.

9. கிருஷ்ணர் வாழ்வில் எத்தனையோ இன்னல்கள் நடந்துள்ளன. அப்பொழுதெல்லாம் அவர் பதட்டப் பட்டதில்லை.  அமைதியாக அதை கையாளுவார். இக்கட்டான சூழ்நிலைகளில் பதட்டபடுவதை தவிர்த்து அதை வெற்றிகரமாக கையாள்வதுதான் சிறந்த வழி என்று உணர்த்தியவர் அவர்.

10. காபாரதப் போரின்போது கெளரவர்களின் படை பலத்தை நன்கு அறிந்தவர். அவர்களை எளிதாக பாண்டவர்களால் வெல்ல முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் அவர்களை எதிர்கொள்ள பாண்டவர்களுக்கு துணை நின்றார். போர் விதிகளை மதித்து அதிலுள்ள நெளிவு சுளிவுகளை பயன்படுத்தி வெற்றி கண்டார். ஆனால், போர் விதிகளை மதித்துதான் அவர் நடந்தார். சில நேரங்களில் பாரபட்சமாக கூட நடந்து இருக்கிறார். காரணம் நியாயம் வெல்லவே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com