மதுரை சித்திரைத் திருவிழா திருத் தேரோட்டம்!

மதுரை சித்திரைத் திருவிழா திருத் தேரோட்டம்!

மதுரை சித்திரைத் திருவிழா திருத் தேரோட்டம் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாசி வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மே 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தீபாராதனைக்கு பிறகு தேரோட்டம் தொடங்கியது. முதலில் சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மாசி வீதிகளில் தேரில் மீனாட்சி சுந்தரேஷ்வர் பவனி வந்தார்கள் . இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.

சித்திரை திருவிழாவில் 8 ஆம் நிகழ்வில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மன் எழுந்தருளினார். மே 2ம் தேதி பிரம்மாண்டமான மீனாட்சி சுந்தரேஷ்வர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருக் கல்யாணத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரம்மாண்டமான அறுசுவை உணவு மதுரை சேதுபதி பள்ளியில் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

Madurai
Madurai

இந்த நிலையில் இன்று காலை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது. தேர் முட்டில் இருந்து மீனாட்சி மற்றும் சுந்தரேஷ்வர் ஆகியோர் தேரில் மாசி வீதிகளை வலம் வந்தனர். தேரை பின் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். மதுரை மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில்கொடியேற்றம், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குதல் உள்ளிட்டவை மிக முக்கிய நிகழ்வாகும். சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் 7ம் நாள் திருவிழாவான சனிக்கிழமை தங்க சப்பரத்தில் பிட்சாடன கோலத்தில் பிச்சாண்டி சுவாமி வீதி உலா வந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com