மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
Published on

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

மதுரையில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சித்திரைத் திருவிழாவாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இதனால் பக்தர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.முன்னதாக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் கற்பக விருட்சம் வாகனத்திலும், மீனாட்சியம்மன் சிம்ம வாகனத்திலும் தங்க கொடி மரத்தின் முன் எழுந்தருளினார்.

Madurai
Madurai

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 2 வார காலம் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை மாலை சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் உலா வருகின்றனர்.

தினமும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் கற்பகவிருட்சம், பூதம், வெள்ளி சிம்மாசனம், தங்க சப்பரம், ரிஷபம், மரவர்ண சப்பரம், இந்திர விமானம் உள்ளிட்ட வாகனங்களில் 4 மாசி வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். திருவீதி உலாவின் போது 4 மாசி வீதிகளிலும் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள்.

எப்ரல் 30-ம் தேதி பட்டாபிஷேகமும், மே 1-ந் தேதி திக்விஜயமும் நடக்க உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 2-ந்தேதி நடக்கிறது. மே 3-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.

மே 4-ந் தேதி மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு கோவிலின் 4 கோபுரங்களும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com