'டங்'என்ற சத்தம், நிகழ்ந்தது அற்புதம், தோன்றியது அன்னையின் திருஉருவம்!

Mahishasura Mardhini Temple
Mahishasura Mardhini Temple
Published on

64 சக்தி பீடங்களுக்கு இணையாக போற்றப்படும்  திருத்தலம்! 

அன்னையின் திருஉருவம் கண்டெடுப்பு:

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், மத்தூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் மகிடாசுரமர்த்தினி அம்மன் பூமியில் இருந்து வெளிப்பட்டு 70 ஆண்டுகள் ஆகின்றன. இத்திருத்தலம் 64 சக்தி பீடங்களுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.

மத்தூர் எல்லையில் 1954 ஆம் ஆண்டு அரக்கோணம் ரேணிகுண்டா இரண்டாவது இருப்பு பாதை போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்திருக்கிறது. அப்போது சக்தி மேடு என்ற இடத்தில் கூலி ஆட்கள் கடைப்பாறையால் மண்ணை பெயர்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். கூலியாள் ஒருவர் கடப்பாறையால் பூமியை குத்திய போது வெண்கல பாத்திரத்தில் தட்டியது போல் டங்க்கென்ற சத்தம் கேட்டதும் அந்த கூலியாள் தெய்வ அருளால் மயக்கம் அடைந்திருக்கிறான். மக்கள் கூட்டமாகக் கூடி மண்ணை அகற்றி பார்த்திருக்கின்றனர். அப்பொழுது அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. ஆம், அன்னையின் கம்பீரமான திரு உருவம் எந்தவித சிதைவும் இன்றி மீட்கப்பட்டிருக்கிறது. 

அன்னையின் காட்சி:

எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி ,கேடயம், திரிசூலம் மற்றும் கபால மாலை ஆகியவற்றை தரித்து மகிடாசுரனை தனது திருசூலத்தால் குத்தி வென்று அருட்பார்வையால் உலகினை நோக்கும் சாந்த வடிவமுடன் அன்னை எழுந்து அருள் புரிந்து வருகிறாள். ஏழு அடிக்கும் மேல் நெடிதுயர்ந்து உள்ள மகிடாசுரணின் தலையின் மேல் அன்னை ஆனந்த நடனம் புரியும் காட்சி காண்பவர்களுக்கு பக்தி பரவசத்தை கூட்டும். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டி பிரமிப்பையும், மெய்சிலிப்பையும் ஏற்படுத்தும்.

விசேஷ பூஜைகளும் அது நடத்தப்படும் நேரமும்:

இத்திருக்கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் இராகு கால சிறப்பு அர்ச்சனைகள், ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி தோறும் நண்பகல் 12.00மணிக்கு நடத்தப்படும் 108 குட பால்அபிஷேகம் ,பௌர்ணமி நாட்களில் இரவில் ஒன்பது மணி முதல் 11 மணி வரை நடத்தப்படும் நவாகலசயாக பூஜைகள்,108 சங்காபிஷேகம் ஆகியன பக்தர்கள் பங்கு கொண்டு பலன் பெறத் தக்கவை. 

இதையும் படியுங்கள்:
தொப்புள் வடிவில் பீமன் கட்டிய சிவன் கோயில் எங்குள்ளது தெரியுமா?
Mahishasura Mardhini Temple

அமைவிடமும், செல்லும் வழியும்:

உலகம் போற்றும் சிறப்பும் பெருமையும் மிக்க மத்தூர் அருள்மிகு மகிடாசுரமர்த்தினி அம்மன் ஆலயம், திருத்தணி - திருப்பதி நெடுஞ்சாலையில், திருத்தணியில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பொன்பாடி ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோயில் முகப்பு வரை செல்ல திருத்தணியில் இருந்து பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும், பௌர்ணமி நாட்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு போக்குவரத்து வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளபடியால், எந்தவித சிரமமும் இன்றி இத்திருத்தலத்திற்கு வருகை தந்து அருள்மிகு மகிடாசுரமர்த்தினி அம்மனை தரிசித்து, வேண்டிய பிரார்த்தனையை செய்து அவள் அருளாசியுடன்  எல்லா நலமும் பெற்று வாழ்வோமாக! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com