சிம்மத்தில் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் இவைதான்!

சிம்மத்தில் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் இவைதான்!

ஜூலை 1ஆம் தேதி செவ்வாய் கடக ராசியில் இருந்து சிம்ம ராசியில் பிரவேசிக்க உள்ளது. செவ்வாயின் இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்களைத் தரப்போகிறது. எந்தெந்த ராசுகள் சுப பலன்களை பெற உள்ளனர் என பார்க்கலாம்.

வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுகிறது. செவ்வாய் இரத்தத்தின் குறியீடாக உள்ளது. இது தைரியத்தையும், வேகத்தையும், வீரத்தையும் தரக்கூடியது. இந்நிலையில், ஜூலை 1ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை செவ்வாய் சிம்ம ராசியிலேயே இருப்பார். சிம்ம ராசி சூரியனின் ராசியாக கருதப்படுகிறது. செவ்வாய் சூரியனின் ராசிக்குள் நுழையும் போது, ​​அதன் பலன் வெவ்வேறு ராசிகளில் வித்தியாசமாக இருக்கும். ஆனால், சில ராசிக்காரர்கள் இந்த செவ்வாய் சஞ்சாரத்தால் சுப பலன்களை பெறுவார்கள். போபால் ஜோதிடரும், வாஸ்து நிபுணருமான பண்டிட் ஹிதேந்திர குமார் சர்மா எந்த ராசிக்காரர்கள் சுப பலன்களை பெற உள்ளனர் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்மம் : செவ்வாயின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் ராசியின் நான்காவது மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய் கிரகத்தின் இந்த சஞ்சாரத்தின் போது, ​​நீங்கள் ஆற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பீர்கள். உங்கள் கையில் எடுக்கும் எல்லா வேலையையும் வெற்றிகரமாக முடியும். நான்காம் வீட்டில் செவ்வாயின் பார்வையால் அதிர்ஷ்டம் கூடும், சிம்ம ராசிக்காரர்களுக்கு நிலம், வாகனம், பண வகையில் நன்மைகள் கிடைக்கும். திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தனுசு : செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். தனுசு ராசியின் ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். இது அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மீகத்திற்கு சாதகமானது. இந்த நேரத்தில், உங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும், உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். இதனுடன், குடும்பத்தில் ஏதேனும் கலாச்சார அல்லது மங்களகரமான நிகழ்ச்சிகள் இருக்கலாம். மாணவர்கள் படிப்பிற்காக வெளியூர் செல்ல வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், எனவே இது அவர்களுக்கு சாதகமான காலமாகும்.

ரிஷபம் : ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் சஞ்சாரம் பல பலன்களை தரும். சிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். செவ்வாய் உங்கள் ராசியின் நான்காம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்களின் சௌகரியம் அதிகரிப்பதை அனுபவிப்பீர்கள். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். இதன் போது தாயாரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும், எதிர்பாராத பண ஆதாயமும் உண்டாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com