பஞ்ச துவாரகா யாத்திரையில் முதன்மையானது மூல துவாரகா!

ஸ்ரீ கிருஷ்ணரின் கோவில்...
ஸ்ரீ கிருஷ்ணரின் கோவில்...

மூல துவாரகையில் கிருஷ்ணர் சத்தியபாமா மற்றும் ருக்மணியுடன் இங்கு தங்கி துவாரகாபுரியை எப்படி நிர்மாணிக்கலாம் என்று ஆலோசனை நடத்திய இடம் என்பதால் இதற்கு மூல துவாரகா என பெயர் வந்தது.

பஞ்ச துவாரகா யாத்திரை குஜராத்தின் ஜுனாகத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கோடினாரில் மூல துவாரகாவுடன் தொடங்குகிறது. மூல துவாரகா ஒரு சிறிய கடலோர கிராமம். இக்கோவில் அவ்வளவாக வெளி உலகத்துக்கு பரவலாக அறியப்படாத ஒன்றாக உள்ளது. பசுமை நிறைந்த மலைகளையும் கடற்பகுதியையும் கொண்டுள்ள பகுதி இது. மூல் என்றால் வேர் அல்லது தோற்றம். பகவான் கிருஷ்ணர் மதுராவிலிருந்து துவாரகைக்கு பயணம் செய்தபோது அவர் முதலில் மூல துவாரகாவில் தான் தங்கினார். இங்குள்ள தலம் மகாபாரத காலத்தை சேர்ந்தது என்றும் இது ஒரு செழிப்பான துறைமுகமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது. 

பகவான் கிருஷ்ணரும், பலராமரும் துவாரகையில் குடியேறுவதற்கு முன்பு இங்கு தங்கினர். இங்கு கிருஷ்ணர் குளித்ததாக கூறப்படும் இடத்துக்கு அருகில் ஆழ்துளை கிணறும் உள்ளது. 6) இக்கோவிலில் ராதாகிருஷ்ணன், ராமர் சீதை மற்றும் லட்சுமி நாராயணர் கோவில்கள் உள்ளன. சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்ட கோவில் இது. சோம்நாத்திலிருந்து 34 கிலோ மீட்டர் தூரத்திலும் வெராவலிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும் கொடினார் உள்ளது. இங்கு மிகவும் பழமையான ஸ்ரீ கிருஷ்ணரின் கோவில் உள்ளது. உள்ளே பித்பஞ்சன் மகாதேவ் மற்றும் சித்தேஷ்வர் மகாதேவ் கோவில்கள் உள்ளன.

ஸ்ரீ கிருஷ்ணரின் கோவில்...
ஸ்ரீ கிருஷ்ணரின் கோவில்...

புராணத்தின்படி ஜராசந்த மன்னன் தன் மகன்களை கொன்றதற்காக கிருஷ்ணரை பழிவாங்குவதாக சபதம் செய்து ஒரு போரை நடத்தினான். ஆனால் அதில் தோற்றான். இருப்பினும் கிருஷ்ணர் அவரை கொல்லவில்லை. காரணம் ஜராசந்தன் பீமனின் கைகளால் இறந்து விடுவார் என்று விதிக்கப்பட்டதால் அவர் துவாரகாவிற்கு சென்றார். அவர் இங்கு மூல துவாரகைக்கு வந்ததை நினைவுபடுத்தும் கல்பலகை ஒன்றுள்ளது.

கொடினாருக்கு அருகில் உள்ள மூல் துவாரகா என்பது பழங்கால கடற்கரை கிராமம். கிராமத்தில் விஷ்ணு மற்றும் கிருஷ்ணருக்கு கோவில்கள் உள்ளது. புராணத்தின் படி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் துவாரகா செல்லும் வழியில் விசாவதா கிராமத்தில் போர்பந்தரில் இருந்தார். அதன் நினைவாக விஸ்வதா (மூல் துவாரகா) கிருஷ்ணரின் பாதுகை (காலடித்தடம்) இந்த கோவிலில் காணப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
மனதை உறுதியைப் பெற வைக்கும் 5 வழிகள்!
ஸ்ரீ கிருஷ்ணரின் கோவில்...

ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் ஜென்மாஷ்டமி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜென்மாஷ்டமி சமயத்தில் கிராமத்தில் ஒரு பெரிய கண்காட்சியும் நடைபெறுகிறது. கொடினார் என்ற இடத்திற்கு அருகில் கடற்கரையில் உள்ள இந்த கிராமம் மூல் துவாரகா எனவும்  உள்ளூரில் இந்த இடத்தை "திவா தண்டி" அதாவது கலங்கரை விளக்கம் என்றும் அழைக்கிறார்கள். 

பூமியிலிருந்து 4 மீட்டர் உயரத்தில் வட்டமான அமைப்பில் கோவில் உள்ளது . கடலடி அகழ்வாய்வாளர்கள் இங்கு தோண்டிப் பார்த்தபோது பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பொருட்கள் கிடைத்தன. ஹரப்பா காலத்திய பொருட்களும் கிடைத்துள்ளன. அப்படியென்றால் 3102 BCE மகாபாரத காலம் என்றது பொருந்தி வருகிறது என்று கூறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com