
'பெரு மழை பெய்து இடி, மின்னலுமாக புரளும்போது அர்ஜுனனை ஸ்மரித்தால் இடி தாக்காது' என்று நம்பப்படுகிறது. இதன் பின்னால் ஒரு புராணக் கதை இருக்கிறது.
அரக்கு மாளிகையிலிருந்து தப்பித்துக்கொண்ட பாண்டவர்கள் காட்டு வழியே செல்கையில் களைப்படைந்து ஒரு மர நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். தருமர், அர்ஜுனனிடம், ''ரொம்பப் பசிக்கிறது. இங்குள்ள மரங்களில் பழங்களோ, காய்களோ தென்படவில்லை. எங்காவது போய் சாப்பிட ஏதாவது கொண்டுவா. நாங்கள் இங்கேயே காத்திருக்கிறோம்" என்று சொன்னார்.
அவ்வாறே அர்ஜுனன் காட்டுக்குள் நடந்து போய்க்கொண்டிருக்கையில் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. அர்ஜுனன் ஒரு மரத்தடியில் நின்றுகொண்டான். பலத்த ஓசையுடன் இடியொன்று எதிரில் இருந்த மரத்தின்மேல் விழுந்தது. பச்சைப் பசேலென்றிருந்த மரம் கருகிப்போய்ச் சாம்பலாகிவிட்டது.