நாக தோஷமும் பரிகாரமும்!

நாக தோஷமும் பரிகாரமும்!

ருவர்தம் வீட்டில் திருமண வயதாகியும் ஆண் அல்லது பெண்ணுக்குத் திருமணம் ஏதாவது ஒரு காரணத்தால் தடைபட்டுக்கொண்டே செல்வது, குடும்ப ஒற்றுமையின்மை, சதா சண்டைச் சச்சரவு, தொடர்ந்து உடல் நலப் பிரச்னைகள் இருந்துகொண்டே இருந்தால் அந்த வீடு நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிந்து கொள்ளலாம்.

சரி, இந்த நாக தோஷம் எப்படி ஒருவருக்கு உண்டாகிறதுதென்றால், அந்த வீட்டில் உள்ள நபர்களோ, அவர்களின் முன்னோர்களோ அல்லது சம்பந்தப்பட்ட நபரோ கூட தெரிந்தோ தெரியாமல் பாம்புப் புற்றை இடித்து இருப்பார்கள். நிறைய பாம்புகளை அடித்தோ அல்லது கொன்றோ இருப்பார்கள். இது போன்றவர்களுக்குத்தான் கடுமையான நாக தோஷம் ஏற்படும்.

ஒருவருக்கு நாக தோஷம் உள்ளது என்பதை எப்படித் தெரிந்துகொள்வதென்றால், வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் அல்லது ஆண்கள் விவாகரத்து ஆனவர்களாகவோ, கைம்பெண்களாகவே இருப்பார்கள்.

கருத்து வேற்றுமை காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழும் சூழ்நிலை இருக்கும்.

குடும்ப அங்கத்தினர்களிடையே ஒருவருக்கொருவர் ஒற்றுமை இருக்காது. தொடர்ந்து பிரிவு, பிரச்னை இருந்துக கொண்டே இருக்கும்.

நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் மற்றும் தோல் நோய்களால் அவதியுறும் சூழ்நிலை இருக்கும்.

மேற்கண்ட பிரச்னைகள் ஒரு குடும்ப உறுப்பினர்களிடையே இருந்தால் அந்தக் குடும்பம் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இனி, நாக தோஷ கடுமையைக் குறைக்கும் சில எளிய பரிகாரங்கள் குறித்துக் காண்போம்.

வீட்டு பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடும் சுவாமி படங்கள் மற்றும் சிலைகளில் நாகத்தோடு இருக்கும் தெய்வங்கள், மேலும் நாகத்தை ஆபரணமாக அணிந்திருக்கும் தெய்வங்களை தினசரி வழிபட்டு வர வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் பஞ்சமி தினங்களில் பாம்புப் புற்றை வழிபட வேண்டும்.

வீட்டிலும், கோயில்களிலும் காய்ச்சாத பசும்பாலை நைவேத்தியமாக வைத்து சுவாமியை வழிபட வேண்டும்.

நாக உருவில் காட்சி தரும் தெய்வங்களான கருமாரி அம்மன், அங்காள பரமேஸ்வரி போன்ற தெய்வ மூர்த்தங்களுக்கு எலுமிச்சை மாலை, வேப்பிலை மாலை அணிவிப்பது நாக தோஷத்தைக் குறைக்கும் வழிபாடாகும். நாகப் புற்றுகளுக்கு மஞ்சள், குங்குமம் வாங்கிக் கொடுப்பது சிறந்த பரிகாரமாகும்.

மேற்சொன்ன பரிகாரங்களை தொடர்ந்து செய்துக்கொண்டே வர, விரைவில் நாக தோஷத்தின் தாக்கம் குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com