நமஸ்கார விதிகள்!

நமஸ்கார விதிகள்!
https://www.maalaimalar.com/

நாம் வணங்கும் தெய்வத்திலிருந்து ,பெற்றோர் பெரியோர் ஆன்றோர், சான்றோர்களை எப்படி வணங்க வேண்டும் என்பதற்கான நமஸ்கார முறையை இந்தப் பதிவில் காண்போம்! 

இது தேவர்களையும் பெரியோர்களையும் வணங்கும் வணக்கம் ஆகும் .

இது தண்டாக்ருதியால் விழுந்து நமஸ்கரித்தலும், நின்றபடியும், இருந்தபடியே நமஸ்கரித்தல் என இரு வகைப்படும். 

விழுந்து நமஸ்கரித்தல் இருவகைப்படும் .அவை அஷ்டாங்க நமஸ்காரமும், பஞ்சாங்க நமஸ்காரமும் ஆகும். 

தலை ,இரண்டு கை, இரண்டு காது, மோவாய், இரண்டு புஜங்கள் எனும் 8 உறுப்புகளும் நிலத்தில் படும்படி நமஸ்கரிப்பது அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும். இது பூமியில் சிரம் வைத்து மார்பு பூமியிலே படும்படி வலக்கையை முன்னும் இடக்கையைப் பின்னும் நேரே நீட்டிப் பின் அம்முறையே மடக்கி வலப்புயமும், இடப்புயமும் மண்ணிலே படும்படி கைகளை வயிற்றை நோக்கி நீட்டி வலக்காதினை முன்னும், இடக்காதினைப் பின்னும் மண்ணிலே படும்படி செய்வதாகும். 

தலை, இரண்டு கை, இரண்டு முழங்கால் என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் படும்படி வணங்குவது பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும். 

ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும்.

மற்ற நமஸ்காரம் என்பது இரண்டு கைகளையும் அஞ்சலிப்பதாகும். 

மும்மூர்த்திகளை வணங்குகையில் சிரசின் ஒரு அடி உயரம் உயர்த்தி கைகூப்புதல் வேண்டும் .

மற்றைய தேவர்களுக்குச் சிரசின் மேல் கைகூப்பி வணங்குதல் வேண்டும்.

குருவை வணங்குகையில் நெற்றியில் கைகூப்பி வணங்குதல் வேண்டும். 

அரசரையும், அதிகாரிகளையும், தந்தையையும் வணங்குகையில் வாய்க்கு நேர் கைகூப்பி வணங்குதல் வேண்டும். 

அந்தணரை வணங்குகையில் மார்பில் கைகூப்பி வணங்குதல் வேண்டும். 

தாயை வணங்குகையில் வயிற்றில் கைவைத்து வணங்குதல் வேண்டும். 

தாய், தந்தை, குரு, தெய்வங்களை மாத்திரம் அஷ்டாங்கமும் (எட்டு அங்கமும்) நிலத்தில் படும்படி ஆண்கள் வணங்குதல் வேண்டும். மற்றையோருக்குத் தண்டாகாரம் கூடாது. 

தவத்தாலும், வயதாலும், ஞானத்தாலும் உயர்ந்தவர்கள் நித்தியம் நமஸ்கரிக்கத்தக்கவர்கள். 

எந்தக் குருவானவர் வேத சாஸ்திர உபதேசத்தால் துக்கத்தைப் போக்கடிக்கத் தக்கவரோ அவரை நித்யம் நமஸ்கரிக்க வேண்டும். 

சபையிலும், யஞ்ஞ சாலையிலும், தேவாலயத்திலும், புண்ணிய க்ஷேத்திரத்திலும், புண்ணிய தீர்த்தத்திலும், வேதாத்யன காலத்திலும் பிரத்தியேகமான நமஸ்காரம் செய்தல் கூடாது. இதனால் முற்பிறவியில் செய்த புண்ணியம் நீங்கிவிடும். 

சிரார்த்தம், தானம், தேவதா அர்ச்சனம், யஞ்ஞம், தர்ப்பணம் செய்பவர்களையும் நமஸ்கரிக்க கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com