நவக்கிரக பரிகார கோயில்கள்!

நவக்கிரக பரிகார கோயில்கள்!

சூரியன்: முதலில் நவக்கிரகங்களுக்கு அருள்புரிந்த திருமங்கலங்குடி ஸ்ரீ பிராணநாதேஸ்வரரை வழிபட்டு பின்பு, சூரியனார் கோயிலுக்குச்சென்று கருவறையில் உள்ள சூரிய சக்கரத்தை வழிபாடு செய்ய வேண்டும். சூரியனை வழிபடுவதாலும், இங்குள்ள நவக்கிரகங்களை வழிபடுவதாலும் அனைத்து தோஷங்களும் நீங்கப் பெறலாம்.

சந்திரன்: தாய்க்குப் பீடை நோய், மனநிலை பாதிப்பு, சந்திரன் ஜாதகத்தில் நீசம், மறைவு, பாவ கிரக சேர்க்கை உள்ளவர்கள் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் உள்ள சந்திரனை வழிபடுவதால் மேற்கண்ட தோஷங்கள் நிவர்த்தியாகும்.

செவ்வாய்: ஜாதகத்தில் செவ்வாய் தோஷ பாதிப்பு, திருமணத்தடை, தொழில் சிக்கல், வீடு, மனை வாங்கத் தடை, அடிக்கடி விபத்து போன்றவை ஏற்பட்டாலும், செவ்வாய் திசை நடைபெறும் காலங்களிலும் வைத்தீஸ்வரன் கோயில் தனி சன்னிதியில் உள்ள செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோஷமும் நீங்கும்.

புதன்: குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வமின்மை, தடங்கல்கள் ஏற்படும்போது திருவெண்காடு புதன் பகவான் வழிபட்ட ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரரை தரிசித்து பின்பு, அங்கு எழுந்தருளியுள்ள புதன் பகவானையும் வழிபட, தோஷங்கள் நீங்கும்.

குரு: திருமணத்தடை, புத்ர தோஷம், குடும்ப ஒற்றுமை, நிம்மதி குறைவு, ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர் வியாழக்கிழமைகளில் ஆலங்குடி குரு பகவானை நெய் தீபம் ஏற்றி, வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.

சுக்ரன்: சுக்ர தோஷம் உள்ளவர்கள் கஞ்சனூரில் அருளும் ஸ்ரீ சுக்ரீஸ்வரரை சுக்ர பகவானாக் கருதி வழிபட்டால் தோஷம் நீங்கும். திருநாவலூர் பார்கவீஸ்வரரை வழிபடவும் சுக்ர தோஷம் நீங்கும்.

சனி: ஜாதகப்படி ஏழரை சனி, அஷ்டம, அர்த்தாஷ்டம சனி தோஷம் ஏற்படும் காலங்களில் திருநள்ளாறு நள தீர்த்தத்தில் நீராடி, தர்ப்பாரண்யேஸ்வரரையும், போக மார்த்த அம்மனையும் வழிபட்ட பிறகு சனீஸ்வரர் சன்னிதி சென்று எள் தீபம் ஏற்றி வழிபட, தோஷம் நீங்கும். மேலும், சனி கிரக பாதிப்புள்ளவர்கள் திருவாதவூர் சனீஸ்வரனை சனிக்கிழமைகளில் வழிபட வேண்டும்.

ராகு: ராகு தோஷம் மற்றும் நாக தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீ பெரும்பூதூரில் அருளும் ஸ்ரீ மத் ராமானுஜரையும், ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் ஸ்ரீ தியாகராஜ நாதவல்லித் தாயாரையும் திருவாதிரை நட்சத்திர நாளில் வழிபட, ராகு மற்றும் நாக தோஷங்கள் நீங்கும்.

கேது: பஞ்ச லிங்கங்களில் வாயு லிங்கம் அருளும் திருத்தலம் திருக்காளஹஸ்தி. கண்ணப்பனுக்கு காட்சி தந்த தலம் இது. இங்குள்ள காளத்தீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்ய, கேதுவினால் உண்டான தோஷங்கள் நீங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com