நெருப்பாய் தகித்த சந்தனம்!

ஸ்ரீ ராகவேந்திரர்
ஸ்ரீ ராகவேந்திரர்
Published on

வேங்கடநாதன் தனக்கு மூன்று வயது ஆகும்போதிருந்தே ஹரி பக்தியில் திளைக்கத் தொடங்கினான். ஆனாலும், வறுமை அவனது குடும்பத்தை மிகவும் சோதித்தது. அந்த நேரத்தில் துவைத வேதாந்த பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர் கும்பகோணம் ஆஸ்தானத்திற்கு வருகை தந்தார். அங்கு நடந்த விருந்தில் கலந்துகொள்ள வேங்கடநாதன் தனது குடும்பத்தோடு சென்றான். சிறுவன் வேங்கடநாதன் ஸ்ரீவிஜயேந்திரரை மிகவும் ஈர்த்தான். அந்தச் சிறுவன் ஒரு தெய்வப் பிறவி என்று உணர்ந்தார். வேங்கடநாதனின் தந்தையார் தனது பொருளாதார வறுமையை சுவாமியிடம் எடுத்துரைத்து வேங்கடநாதனுக்கு அக்ஷராப்பியாசம் செய்விக்கும்படி வேண்டினார். வேங்கடநாதனுக்கு அக்ஷராப்பியாசம் செய்தார் விஜயேந்திரர்.

காலக்கிரமத்தில் சரஸ்வதி என்ற இளம்பெண்ணை வேங்கடநாதனுக்கு மணம் செய்வித்தனர். அவர்களுக்கு லட்சுமிநாராயணன் என்ற மகன் பிறந்தான். வருமானம் போதாத வறுமை வீட்டைச் சூழ்ந்தது. சரஸ்வதி உடல் இளைத்து மனம் சோர்ந்தாள். கணவரை சுதீந்திர தீர்த்தரிடம் சென்று மேற்கல்வி பயின்றுவரும்படி வேண்டினாள். கும்பகோணத்தில் சுதீந்திரரின் மடத்தில் காலடி வைத்த வேங்கடநாதனை விஷ்ணு பக்தன் சங்குகர்ணனாக சுவாமி அடையாளம் கண்டார். அவர் வந்த காரணத்தையும் தெரிந்து கொண்டார். மிகவும் சிரத்தையோடு கல்வி சொல்லிக் கொடுத்தார். வேங்கடநாதனிடம் குருநாதர் காட்டிய சிரத்தை மற்ற சீடர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அதனை அறிந்த குரு, சீடர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினார்.

ஒரு நாள் இரவு சீடர்களோடு வேங்கடநாதனின் அறைக்குச் சென்றார் குருநாதர். அந்த அறையில் வேங்கடநாதன் குளிரில் நடுங்கி ஒடுங்கி படுத்திருந்தார். அவரின் அருகில், ‘சுதா’ என்ற நூலுக்கு எழுதிய ‘பரிமளம்’ என்ற வியாக்கியானத்தின் ஓலைச் சுவடிகள் இருந்தன. குரு அந்த சுவடிகளை எடுத்துப் படித்துப் பார்த்து ஆனந்தமடைந்தார். அதுமட்டுமின்றி. தான் அணிந்திருந்த பட்டு சால்வையை சீடனின் மேல் போர்த்தி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். சற்று நேரத்தில் வேங்கடநாதனுக்கு விழிப்பு வந்து பார்த்தபோது தன் மேல் குருநாதரின் பட்டு சால்வை இருந்ததை கவனித்தார். குருநாதரின் சால்வையைப் போர்த்துக்கொள்ளும் தகுதி தனக்கு இல்லை என்று மிகவும் மனம் வருந்தினார்.

ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவ சமாதி
ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவ சமாதி

ரு திருமண விழாவிற்கு அழைக்கப்பட்ட வேங்கடநாதனுக்கு விருந்தினர் அலங்காரத்திற்காக சந்தானம் அரைக்கும் வேலையை கொடுத்தார்கள். அரைத்த சந்தனத்தை கிண்ணத்தில் எடுத்துச் சென்று அவர்களுக்கு அளித்தார் வேங்கடநாதன். அதை உடலில் பூசிக்கொண்ட விருந்தினர்களுக்கு உடலெல்லாம் நெருப்பாய் எரியத் தொடங்கியது. “உனக்குத் தகுந்த வேலை தரவில்லை என்று சந்தனத்தில் மிளகாய்ப்பொடியை கலந்து கொண்டுவந்தாயா?” என்று புரோகிதர் வெகுண்டார். வேங்கடநாதன், “தான் அக்னி சூக்தம் பாராயணம் செய்துகொண்டே சந்தனம் அரைத்ததால் அவ்வாறு நேர்ந்திருக்கலாம்” என்று கூறி, வருண சூக்தம் சொல்லிக்கொண்டே மீண்டும் சந்தானம் அரைத்துக் கொடுத்தார். அதைப் பூசிக்கொண்ட விருந்தினருக்கு இமயமலைப் பனியில் இருப்பதைப் போல் குளிச்சியாக இருந்தது. இந்த நிகழ்வால் வேங்கடநாதனின் அருமையை அறிந்து நிறைவான சம்பாவனையும் பரிசுகளையும் கொடுத்து அனுப்பினார்கள்.

இப்படி அற்புதங்கள் பல புரிந்த அந்தச் சிறுவன்தான் பிற்காலத்தில் மகான் ஸ்ரீ ராகவேந்திரராக பக்தர்களுக்கு அருள்புரிந்தார். ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமைகளும் அவர் கூறிய போதனைகளும் அநேகம். பக்தி தத்துவத்தை உயர்வாக போதித்த மகாபக்தர் ஸ்ரீராகவேந்திரர்.

‘பூஜ்யாய ராகவேந்த்ராய
சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய
சமதாம் காமதேனவே!’

என்ற சுலோகத்தை படிப்பவருக்கு சுவாமியின் அருளால் துன்பங்கள் விலகி மனசாந்தி கிட்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com