பஞ்ச பைரவர்களும் - ஈசனும் அருளும் ஆவூர் பசுபதீஸ்வரர்!

பசுபதீஸ்வரர் கோவில்...
பசுபதீஸ்வரர் கோவில்...

திருஞானசம்பந்தர் தேவார பதிகம் பெற்றது. ஆவூர் பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்தால் வாழ்வின் அனைத்து துன்பங்களும் நீங்கும். இங்கு மூலவர் பசுபதீசுவரர் சுயம்புலிங்கவடிவில் அருள்பாலிக்கிறார். 

இத்தலத்தில் 5 பைரவர்கள் சிவனை நோக்கி நின்ற கோலத்தில் அருளுகின்றனர். எனவே இத்தலம் பஞ்ச பைரவர் தலம் என அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் மங்களாம்பிகை, பங்கஜவல்லி என இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர். இதில் மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப் பட்டதாகும். 

பங்கஜவல்லி அம்மன் மிகவும் பழைமையானது. தேவாரத்தில் பங்கயமங்கை விரும்பும் ஆவூர், என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு மங்களாம்பிகை சந்நிதிக்கே. இத்தல முருகன் வில்லேந்திய வேலனாகக் காட்சியளிக்கிறார். காமதேனு என்னும் பசு வழிபட்ட தலம் என்பதால், இந்த ஊர் ‘ஆவூர்’ என்றானது. 

ஒரே பீடத்தில் அமைந்த ஐந்து பைரவர்கள். தேய்பிறை அஷ்டமி திதி அன்று, இந்த பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்தால் வாழ்வின் அனைத்து துன்பங்களும் நீங்கும். பிதுர் தோஷத்தையும் பைரவர் வழிபாடு நிவர்த்தி செய்யும்.

பூலோகத்திற்கு வந்த பராசக்தி, தவம் செய்வதற்காக இங்கு தங்கினாள். பராசக்தியின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி தந்தார். எனவே இத்தல இறைவனுக்கு "கவர்தீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வனத்தின் பெருமையை காமதேனுவின் கன்றான "பட்டி' என்ற பசு உணர்ந்தது.

ஒரு லிங்கம் அமைத்து தனது பாலால் அபிஷேகம் செய்தது. அதற்கு காட்சியளித்த சிவனிடம், அந்த தலத்திலேயே நிரந்தரமாக தங்குமாறு கேட்டுக் கொண்டது. பசு வழிபட்ட தலமாதலால் இறைவன் "பசுபதீஸ்வரர்' என்றும் அழைக்கப்பட்டார்.

பஞ்ச பைரவர் ...
பஞ்ச பைரவர் ...

வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரம்மன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கிய தலம்.. (காமதேனு உலகிற்கு வந்த இடம் - கோ+வந்த + குடி கோவந்தகுடி ஆயிற்று) 

கயிலையிலிருந்து, ஆதிசேடனுடன் போட்டியிட்டு வாயுதேவனால் கொண்டு வரப்பட்ட இருமலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றது ஆவூரிலும் தங்கியதாகப் புராண வரலாறு கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
தூக்கம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில உண்மைகள்!
பசுபதீஸ்வரர் கோவில்...

இத்தலம் மாடக் கோவிலாக விளங்குவது.

திருக்கயிலாய மலையிலிருந்து வாயுதேவனால் கொண்டுவரப்பட்ட இரண்டு மலைத்துண்டுகளில் ஒன்று நல்லூரிலும், ஒன்று இவ்வூரிலும் தங்கியதாகக் கூறப்படுகிறது. பிரம்மன், சப்தரிஷிகள், கணங்கள், தேவர், இயக்கர், கந்தருவர், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், திருமால், தசரதர் முதலியோர் வழிபட்டு அருள்பெற்ற தலம்.

இருப்பிடம்; கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் அடுத்துள்ளது, ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com