திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருவிழா!

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருவிழா!
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருவிழா நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆலயங்களுள் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில். இந்தியாவில் உள்ள 108 வைணவ திருத்தலங்களுள் 76-வதாக போற்றபடுவதும் 13 மலை நாட்டு திருப்பதிகளில் இரண்டாவது ஆலயமானதாகவும் கருதப்படும் இந்த ஆலயத்தில் மூலவர் 22அடி நீளமும் 16008 சாளை கிராமங்கள் உள்ளடக்கிய கடுக்கரை திருப்படிமமாக அமையபட்டதாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில், வருடத்தில் ஐப்பசி மற்றும் பங்குனி மாதங்களில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெற்று ஆறாட்டு வைபவத்துடன் நிறைவு பெறும்.

திருக்கோயிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆறாட்டு வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.

அதேபோல் இந்த வருடத்திற்கான பங்குனி திருவிழா கடந்தமாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் தொடர்ந்து தினமும் அனந்த வாகனம், கருட வாகனம், பல்லாக்கு உட்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி பவனி வரும் நிகழ்ச்சியும், பள்ளிவேட்டையும் நடைபெற்றது.

இதையடுத்து, முக்கிய நிகழ்வான ஆறாட்டு வைபவம் நடைபெறுவதற்கு முன்னதாக ஆலயத்திலிருந்து ஆறாட்டிற்கு திரும்பிய, சுவாமி சிலைகளுக்கு தமிழக காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணியாறு உள்ளிட்ட மூன்று ஆறுகள் சங்கமிக்கும் மூவாற்று முகத்தில் ஆலய தந்திரி மாத்தூர்மடம் சஜித் நாராயணகுரு தலைமையில் ஆதிகேசவ பெருமாளுக்கு ஆறாட்டு வைபவம் நடைபெற்றது.

மேலும் ஆறாட்டு முடித்து ஆலயத்திற்கு திரும்பிய சாமி சிலைகளுக்கு வழியெங்கிலும் பக்தர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் திரளானோா் பங்கேற்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com