ஏழுமலையான் கோயிலில் பங்குனி மாத பௌர்ணமி தங்க கருட சேவை நிகழ்ச்சி!

ஏழுமலையான் கோயிலில் பங்குனி மாத பௌர்ணமி தங்க கருட சேவை நிகழ்ச்சி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பங்குனி மாத பௌர்ணமி தங்க கருட சேவை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். நேற்று வைகாசி மாத பெளவுர்ணமியை முன்னிட்டு இரவு கோவிலில் இருந்து புறப்பட்ட வாகனம் மண்டபத்தை அடைந்து மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுபாட்டில் உள்ள இக்கோயிலிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்திருக்கோவிலில் ஓவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று மலையப்பசுவாமி பக்தர்களுக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி பாலிக்கிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஏழுமலையானை தரிசித்தனர். மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய நான்கு மாடவீதிகளில் பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துக்கு மத்தியில் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.

அதன்படி பங்குனி மாத பௌர்ணமியான நேற்றிரவு மலையப்பசுவாமி கோவிலிருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு பக்தர்களுக்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுவாமிக்கு தூபதீப நெய்வேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது. பின்னர் மாட வீதிகளின் வழியாக உலா வந்த மலையப்பசுவாமியை கண்டதும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு சுவாமியை தரிசித்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com