பழனி முருகன் கோவில்: தைப்பூசத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்!

பழனி முருகன் கோவில்: தைப்பூசத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்!
Published on

முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனிமுருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் இன்றூ பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

பழனி முருகன் ஆலயத்தில் தைப்பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் 17- ம் தேதியும், 18 -ம் தேதி தைப்பூசத்திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்தநிலையில் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறீவித்துளளதால், இன்றூ ஏராளமான பக்தர்கள் முன்கூட்டியே சாமிதரிசனம் செய்யவருகைதந்துள்ளனர். இதையடுத்து மலையடிவாரத்தில் உள்ளகிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் கோயில் நிர்வாகம் மாற்றூ ஏற்பாடுகள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறீத்து பழனி தேவஸ்தானம் சார்பாக தெரிவிக்கப் பட்டதாவது:

பழனி மலை அடிவாரத்திலிருந்து யானைப் பாதை வழியாக மலைமீது செல்லக்கூடிய பக்தர்கள், சாமி தரிசனம் செய்துவிட்டு படி பாதை வழியாக கீழே இறங்கி வரும் வகையில் ஒரு வழிப் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது, முகக்கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் பாதுகாப்பு பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

–இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com