கவிதை: வேலவனின் வேல்விழி!

murugan
Murugan
மரிய சாரா

நான் மரிய சாரா. எண்ணங்களில் எப்போதும் சிந்தனைகள். அந்த சிந்தனைகளுக்கு உருவம் கொடுத்து எழுதிக்கொண்டிருப்பது இயல்பாகவே எனக்குள் இருக்கும் ஆர்வம், திறமை எல்லாம். இந்த எனது இனிய பயணத்தில் கல்கியுடன் கைகோர்த்து நடந்துகொண்டிருக்கிறேன்.

Updated on

வேலோடும் மயிலோடும்

நின்றாடும் என் இளையோன்

கனவிலும் நினைவிலும்

என்னுள்ளே கலந்தாடும்

எனதுயிர் காதலன்

கந்தன் என்பார்

கடம்பன் என்பார்

செந்தூர மேனியழகன்

என் தமிழின் நாயகன்

வார்த்தையில் வர்ணிக்க

இயலா பேரழகன்

காலமெல்லாம் காதல் செய்ய

கார்த்திகேயன் ஒருவன் போதும்

வேறேதும் வேண்டாமே

கந்தா நீ இருக்க

நிலவின் நீல வானம் போலே

என் நினைவில் நீ இங்கு

வேண்டும் முன்னே

வேல் ஏந்தி வருவாய்

வேதனை தீர்த்து என்

விழியில் நிறைவாய்!

logo
Kalki Online
kalkionline.com