
அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்!
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தேஹம் கணநாயகம்!!
(பார்வதியின் மனத்துக்கு மகிழ்வளிப்பவரும், ஸத்ப மாத்ரு கணங்களால் ரக்ஷிக்கப்பட்டவரும், பக்தர்களிடம் அன்பு பூண்டவரும், மதம் கொண்டவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான மஹாகணபதியை நமஸ்கரிக்கிறேன்)
சிறுவன் பல்லால், தினந்தோறும் அக்கம்பக்கத்து வீட்டுப் பையன்களுடன் மரங்களடர்ந்த தோப்புக்குச் சென்று விளையாடுவது வழக்கம். அப்படி விளையாடும்போது, முன் தவத்தின் பயனாக தோப்பினுள் கிடந்த சாதாரண கல், ஒருநாள் அவன் கவனத்தை ஈர்த்தது. அவன் கண்களுக்கு அது விநாயகர் ரூபமாகத் தென்படவே, அதை நீர் கொண்டு கழுவி நறுமலர்களால் பூசிக்கலானான். இவனது செய்கையைக் கண்ட மற்ற சிறுவர்கள் பூஜைக்கு வேண்டிய மற்ற பணிகளை ஆர்வமுடன் ஏற்றுக்கொண்டனர். நாளுக்குநாள் இத்தகைய பூஜை வளர்ந்துகொண்டே வந்தது.