
ஸர்வவிக்னஹரம் தேவம் ஸர்வ விக்ன விவர்ஜிதம்!
ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தேஹம் கணநாயகம்!
- கணாஷ்டகம் (8)
(ஸர்வ விக்னங்களையும் (பக்தியற்றவர்களுக்கு) செய்கிறவரும், தேவரும், பக்தர்களுக்கு ஏற்படும் எல்லா விக்னங்களையும் நிவர்த்திப்பவரும், ஸர்வ ஸித்திகளையும் கொடுப்பவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீமஹா கணபதியை நான் நமஸ்கரிக்கிறேன்.)
'மஹத்' தலத்தில் அமைந்துள்ள வரத விநாயகர் திருக்கோயிலை தோற்றுவித்த மாமுனிவர் கிருச்சமேதர், ஒருமுறை ஆழ்ந்த தவத்தில் இருந்து, திடீரென்று கண் விழித்தார். அவரது தீட்சண்யமான பார்வையிலிருந்து, இடியோசை போன்ற ஆரவாரத்தோடு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. சிவந்த நிறமும், அதியற்புத அழகும், பளபளக்கும் மகுமும், நவரத்ன குண்டலமும், திடந்தோன் கவசமும் என்று அலங்காரங்களுடன் விளங்கிய அக்குழந்தையிடம், "நீ யார், எங்கிருந்து வந்தாய்?” என்று பயந்தபடியே கேட்டார் முனிவர்.