திருடாதே! திருடினால்... கருட புராணத்தின் படி, திருடர்களுக்கு என்ன தண்டனை?

Garuda Purana Punishment for thief
Garuda Purana Punishment for thief
Published on

பொதுவாக நாம் செய்யும் நன்மைக்கும் தீமைக்கும் அதற்கேற்றவாறு பலன் திரும்ப கிடைக்கும். நாம் செய்யும் ஒவ்வொரு தவறான செயலுக்கும் அதற்கேற்றவாறு நமது கணக்கில் பாவங்கள் ஏறிக் கொண்டே இருக்கும். அதற்கான தண்டனைகளை வாழும்போதோ அல்லது வாழ்க்கை முடிந்த பிறகோ நிச்சயம் அனுபவிக்க வேண்டும். இதைத்தான் பலரும் கர்மா என்கின்றனர். அதனால் வாழும் போதே தவறுகள் செய்வதை குறைத்து இருந்தால் பிற்காலத்தில் எந்த ஒரு துன்பமும் அடையாமல் இருக்கலாம்.

ஒருவரின் வாழ்க்கை முடிந்த பிறகு நடைபெறும் தொடர்ச்சியான சம்பவங்களை கருட புராணத்தில் எழுதி வைத்துள்ளனர்.

இந்து தொன்மவியலில் 18 புராணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கருட புராணம். இந்த புராணம் ஒரு நபரின் தற்கால வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்ல,  அவர் இறந்த பிறகு, என்ன நடக்கிறது? அந்த நபரின் ஆன்மாவிற்கு என்ன ஆகிறது? என்பதைப் பற்றியும் கூறுகிறது. கருட புராணம் மற்றவர்களுக்கு தீங்கின்றி வாழும் நல்ல மனிதர்களின் ஆன்மாவிற்கு என்ன நடக்கும் என்பதையும், தீய செயல்களை மற்றவர்களுக்கு செய்து வாழும் நபர்களின் ஆன்மாக்களுக்கு என்ன நடக்கும் என்பதையும் விளக்குகிறது.

இதையும் படியுங்கள்:
நந்தி வாயில் இருந்து வழியும் இரத்தம்! என்ன காரணம் தெரியுமா?
Garuda Purana Punishment for thief

மனிதனாக பிறந்த ஒவ்வொரு நபரும் தனது கர்மவினையை ஏதாவது ஒரு வடிவத்தில் அனுபவித்து தான் ஆக வேண்டும். கர்மவினையிலிருந்து எந்த ஒரு நபரும் தப்பிக்க முடியாது. நிறைய நன்மைகளை செய்த நபருக்கு சொர்க்கமும் நிறைய தீமைகளை செய்த நபர்களுக்கு நரகமும் கிடைக்கும். நரகத்தில் ஒருவர் செய்த தீய வினைகளுக்கு ஏற்றவாறு ஏராளமான மோசமான தண்டனைகள் கிடைக்கும். இந்த தண்டனைகளில் இருந்து எவரும் தப்பிக்கவே முடியாது.

இதையும் படியுங்கள்:
காட்டேரி அம்மன் உருவான கதை தெரியுமா?
Garuda Purana Punishment for thief

கருட புராணம், விஷ்ணுவுக்கும் பக்ஷி ராஜாவுக்கும் இடையே நடந்த உரையாடலைக் குறிப்பிடுகிறது. புராணங்களின்படி, பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும், விலங்கும் ஒரு நாள் இறந்துவிடும். எனவே அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் ஆன்மாவுக்கு என்ன நடக்கும் என்பது அவர்களின் கர்மாவைப் பொறுத்து மாறுபடும். பிறப்பு, இறப்பு, நரகம், சொர்க்கம், யமலோகம் போன்ற பல விஷயங்களைப் பற்றி கருட புராணம் கூறியுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மற்றவர்களின் பணத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு மரணத்திற்குப் பிறகு வழங்கப்படும் சரியான தண்டனையைப் பற்றிய மிக விரிவான தகவல்களை கருட புராணம் வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
சிவபெருமானுக்கு உயிருள்ள நண்டு படைத்து வழிபடும் கோயில் எங்குள்ளது தெரியுமா?
Garuda Purana Punishment for thief

பிறரின் பணத்தினை திருடியவர்கள் பெரும் பாவம் செய்தவர்களாக உள்ளனர். மரணத்திற்குப் பிறகு, அத்தகையவர்களை தர்மராஜனின் பணியாளர்கள் கயிற்றால் கட்டி நரகத்திற்கு அழைத்துச் செல்கிறார். அதன் பிறகு பலமுறை அவர்களை கசையால் அடிக்கின்றனர். இந்த அடியின் போது அவர்கள் மயக்கமடைந்தால் , சுயநினைவு வந்ததும் முஷ்டியால் பல வகைகளில் தாக்கப்படுகிறார்கள்.

இந்த கருட புராண புராணத்தில் குறிப்பிட்டுள்ளபடி நடுக்குமா நடக்காதா என்பது யாருக்கும் தெரியாத விஷயம்தான். ஆனால் நம் முன்னோர்கள் சொன்ன கருது என்ன? ஒவ்வொரு மனிதனும் நல்வழி பின்பற்றி வாழ வேண்டும் என்பதே இல்லையா? எனவே வாழும் காலங்களில் எந்த தீமையும் செய்யாதீர்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com