இறைவனை மனதில் நிறுத்தி உணவுக்கட்டுபாட்டுடன் இருக்கும் விரதங்கள் உடல் + உள்ளம் + ஆன்மா... மூன்றுக்குமான அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு பழமைவாய்ந்ததும், மகத்துவம் மிக்கதுமாகும்.
புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு தளியல் போட… சகல தடைகள் + சங்கடங்கள் நீங்கிவாழ்வில் வளம் பெருகும்.
எம்பெருமானுக்கு தளியல் போட சில நைவேத்தியங்கள்.
கல்கண்டு சாதம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி 1 கப், பால் 1 லிட்டர், கல்கண்டு 2 கப், நெய் ½ கப், முந்திரி திராட்சை தலா 15, எலத்தூள் ½ டீஸ்பூன், குங்குமப்பூ 1 சிட்டிகை (ஒரு கரண்டி பாலில் ஊற வைக்கவும்).
செய்முறை:
அரிசியுடன் பால் + 2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் குழைய வேகவிடவும். வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து கல்கண்டை பொடித்து சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.
கல்கண்டு கரைந்து, சாதத்தோடு நன்றாகக் கலந்ததும் இறக்கவும்.
நெய்யில் பாதியளவைக் காயவைத்து முந்திரி, திராட்சை மை வறுத்து எடுக்கவும்.
இந்த நாளில் கலவை + மீதமுள்ள நெய் + ஏலப்பொடி + பாலில் கரைத்து குங்குமப்பூ அனைத்தையும் கல்கண்டு சாதக் கலவையோடு சேர்ந்த கிளறி இறக்கவும்.
எள் சாதம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி 1 கப், கடுகு ¼ டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய், நெய் தலா 1 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு.
வறுத்து பொடிக்க:
கருப்பு எள் ¼ கப், தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
அரிசியை உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்து வைத்துக்கொள்ளவும். வறுத்து பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் தனித்தனியாக
மொறு மொறுப்பாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் + நெய்யை ஒன்றாக சேர்த்து காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தாளித்து, சாதத்தில் கொட்டி அதனுடன் வறுத்து அரைத்த பொடியைத் தூவி கிளறி இறக்கவும்.
மிளகு சீரக சாதம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி 1 கப், நெய் 1 டேபிள்ஸ்பூன், கடுகு ½ டீஸ்பூன், முந்திரி 8, கறிவேப்பிலை சிறிதளவு,
வெறும் வாணலியில் வறுத்து பொடிக்க:
மிளகு சீரகம், துவரம் பருப்பு தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 1, கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை:
அரிசியை உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்து எடுக்கவும். 1 டீஸ்பூன் நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, முந்திரி ஆகியவற்றை தாளிக்கவும்.
சாதத்துடன் தாளித கலவை + பொடித்து வைத்துள்ள பொடி + மீதமுள்ள நெய் + தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்துக்கிளறி இறக்கவும்.
கதம்ப சாதம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி 1 கப், துவரம் பருப்பு ½ கப், கேரட் 1, பீன்ஸ் 6, முருங்கைக்காய் 1, கத்தரிக்காய் 2, வாழைக்காய் பாதி, உருளைக்கிழங்கு 1, தக்காளி 3, சாம்பார் பொடி 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் ½ டீஸ்பூன், மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன், கறிவேப்பிலை+மல்லித்தழை சிறிதளவு, நெய் சிறிதளவு, கடுகு ½ டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு, புளி - கோலிக்குண்டு அளவு.
செய்முறை:
அரிசி பருப்புடன் மஞ்சள் தூள் + உப்பு + பெருங்காயத்தூள் சேர்த்து 5 கப் நீர் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும். புளியை 1 கப் நீரில் கரைத்து வைக்கவும்.
ப்ரௌன் பேரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து தாளித்து தக்காளி + காய்கறிகள் சேர்த்து வதக்கவும். பிறகு சாம்பார் பொடி + உப்பு + புளிக்கரைசல் சேர் தந்து மிதமான தீயில் வேகவிடவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் அதனுடன் சாதக்கலவை + நெய் + கறிவேப்பிலை + மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
புரட்டாசி சனிக்கிழமை தளியல் போட்டு மகிழ்வுடன் கொண்டாடுங்கள். சகல சௌபாக்கியங்களும் வாழ்வில் கிட்டும்.