
நெல்லை மாவட்டத்தில் உவரி ஒரு கடற்கரை கிராமம் ஆகும். இந்த கிராமம் திருநெல்வேலியில் இருந்து 70 கிலோ மீட்டர், கன்னியாகுமரியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியானது ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் வருகிறது. இது கடற்கரை கிராமமாக இருப்பதால், இங்கு மீனவர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் பரதர் இனத்தை சேர்ந்தவர்கள். உலகின் பரதர்கள் எனப்படுகின்றனர்.
இந்த கிராமம் வரலாற்றுப்படி 'ஒபீர் பட்டினம்' என அழைக்கப்படுகிறது.1530 ஆம் ஆண்டு செயின்ட் பிரான்சிஸ் சேவியர் அடங்கிய குழுவினர் கோவாவில் இருந்தும் ஸ்பானிஷ் மிஷினரி குழுவினர் இங்கு வந்து பரத மீனவர்களிடையே ரோமன் கத்தோலிக்க மதத்தை பரப்பி, தங்கள் பிரச்சாரம் மூலம் அவர்களை மதம் மாறச் செய்து, அவர்களுக்கு அவர்களது பெயர்களுக்கு பின்னால் பெர்னான்டோ என்ற அடைமொழியையும் வழங்கினர்.
17 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் கப்பலில் வந்த நபர்களுக்கு காலரா நோய் பரவியது. அப்போது கப்பலில் இருந்த ஒரு தச்சன், புனித அந்தோனியார் மரச் சிற்பத்தை உருவாக்கினான். மாலுமிகள் இந்த உவரி கடற்கரைக்கு வந்த போது இந்த புனித அந்தோனியார் சிலையை வைத்து வழிபட்டினார். முதலில் ஒரு சிறிய குடிசையில் வைத்து அந்தோனியார் மரச் சிற்பத்தை வழிபட்டனர்.
1940 ஆம் ஆண்டு கிராம மக்கள் புனித அந்தோனியார் தேவாலயத்தை இங்கு கட்டினர். அவர் தனது கையில் குழந்தை இயேசுவை வைத்திருந்தார். அவரை வழிபடுவோருக்கு நன்மைகள் ஏற்பட்டது. அதன் பிறகு எண்ணற்ற மக்கள் வருகை தர தொடங்கினர். அற்புதங்கள் பல நடந்தன. எனவே, தேவாலயம் பெரிய அளவில் கட்டப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 1904 ஆம் ஆண்டு உவரி கடற்கரையில் ஒரு பெட்டி மிதந்து வந்தது. அதை அங்குள்ள மீனவர்கள் எடுத்து வந்து பார்த்தபோது அந்த பெட்டிக்குள் ஒரு சிறிய மாதா சிலை இருந்தது. 500 முதல் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்து சிலையை இந்த பகுதியை வைத்து வழிபாடு செய்தனர்.
முதலில் இந்த மாதா சிலையை வைத்து கடற்கரை ஓரம் ஒரு சிறிய கோவில் உருவாக்கினார்கள். கடல் அரிப்பின் காரணமாக அது அழிந்து போனது. அதன் பின்னர் அன்னை மாதா மீனவர்களின் கனவில் தோன்றி தனக்கு ஒரு பெரிய ஆலயம் கட்ட வேண்டும் என்று கூறியதாகவும், அதன்படி, கீழே கப்பல் போன்ற அமைப்பும் அதன் மேல் பகுதியில் விமானம் இருப்பது போன்றும் ஒரு பெரிய கட்டிடம் உருவாக்கப்பட்டது.
அதாவது நீரும், வானமும் ஒன்று என்ற தத்துவத்தின் பேரில் இந்த கப்பல் ஆலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயம் 1970 இல் தொடங்கி 1974 இல் பணி நிறைவு பெற்றது. 2000 ஆண்டு இந்த செல்வ மாதா ஆலயம் நடைமுறைக்கு வந்தது. இந்த இடம் சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்த ஆலயத்தில் அருட் சகோதரிகள் இரவில் தங்குவது வழக்கம். அப்போது செப்டம்பர் 15ஆம் தேதி இருளில் ஒரு அதிசயமான பிரகாசமான ஒளி தோன்றியது. அந்த ஒளியை செல்வ மாதா எனக் கூறுகிறார்கள் இங்குள்ள மக்கள். செப்டம்பர், அக்டோபர் மாதம் இங்கு சிறப்பாக திருவிழா நடைபெறும்.
பாதர் தாமஸ் தலைமையில் இந்த கப்பல் மாதா ஆலயம் மிக சிறப்பாக நடைபெறுகிறது. எண்ணற்ற அற்புதங்கள் தினமும் நடந்து வருகின்றன. இந்த தேவாலயத்தில் மூன்று மாதாக்கள் காட்சி தருகின்றனர். விண்ணையும், மண்ணையும் இணைக்கும் இந்த மாதா கோவில் சிறப்பாக விளங்கி வருகிறது.