சிவன் கோயில்களில் சிவராத்திரி.

சிவன் கோயில்களில் சிவராத்திரி.
Published on

பெங்களூரிலிந்து கோலார் தங்க வயல் செல்லும் வழியில் உள்ளது கம்மசமுத்திரம். இங்குள்ள கோடி லிங்கேஸ்வரர் கோயிலில் சிறியதும் பெரியதுமாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் உள்ளன. பிரார்த்தனை நேர்த்தி கடனாக இங்கே பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்கள்தான் இவை. பிரதான லிங்கம் 108அடி உயரம் கொண்டது. மகா சிவராத்திரியின்போது இந்த சிவலிங்கத்துக்கு அபிஷேகம் ஆராதனைகள் வெகு சிறப்பாக இருக்கும். ஹெலிகாப்டர் மூலம் லிங்கத்தின் மீது பூக்களைத் தூவி பூஜை நடைபெறும்.

திருவாரூரிலிருந்து 13கி மீ தொலைவில் உள்ளது வேளுக்குடி. மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ளது. இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ருத்ரனாக வேடம் தரித்து ஒருவர் உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு காலில் சிலம்பு அணிந்து அம்மனிடம் சென்று திரிசூலம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். பிறகு அவரே மயான ருத்ரனாக வேடம் புனைந்து மயானத்திற்கு சென்று பின் திரும்புவார். அப்பொழுது தரப்படும் திருநீறு நோய்கள் பலவற்றை தீர்க்கும் சக்தி கொண்டது என்பது ஐதீகம்.

காராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூரிலிருந்து 20கி மீ தொலைவில் உள்ளது ஜோதிடர் என்ற மலைக்கோவில். இங்குள்ள இறைவன் க்ஷீகேதாரேஸ்வரர். இவர் பெரிய மீசையுடன், தலைப்பாகையுடன் காட்சி தருகிறார். இங்கு வரும் பக்தர்கள் கீழே சிதறிக் கிடக்கும் குங்குமத்தை உடல் முழுவதும் பூசிக் கொண்டு, பின் சிவனை வழிபடுகின்றனர். மகாசிவராத்திரி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராயகோட்டி, ராஜநாயுடு ஸ்ரீ வீரபத்திரர் கோயிலில் நடைபெறும் சிவராத்திரி பூஜை விசேஷமானது. அன்றைய தினம் ஸ்ரீ வீரபத்திரர் சன்னதியில் 365படி அரிசியை சாதமாக வடித்து படையல் போடுகிறார்கள். அத்துடன் அதில் பூசணிக்காய், அதிரசம், கிழங்கு ஆகியவற்றை மலை போல் குவிக்கிறார்கள். பிறகு வீரபத்திரரிடம் உள்ள கத்தியால் அன்னத்தை கிளறி சிதறடித்து வழிபட்டு பின் அதை பிரசாதமாக வழங்குகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com