குட்டிக் கதைகள் - ஊதாரித்தனம்!

ஓவியம்; கே.கே.
ஓவியம்; கே.கே.

கான் ஒருவரிடம் செல்வந்தர் ஒருவர் தன் மகன் ஊதாரியாக இருப்பதைச் சொல்லி, அவனைத் திருத்தும்படி வேண்டினார். செல்வந்தரின் மகனை அழைத்த மகான், பெரிய பாறாங்கல் ஒன்றைக் காட்டி, அதனை பக்கத்திலிருந்த மலைக்குத் தூக்கி வருமாறு சொன்னார். அவனும் மிகுந்த சிரமப்பட்டு அந்தப் பாறையைச் சுமந்து வந்தான். மலை உச்சிக்கு அவன் அப்பாறையைக் கொண்டு வந்ததும், “அந்தப் பாறையை கீழே உருட்டிவிடு” என்றார் மகான். அவன் கோபத்தோடு அவரைப் பார்க்க, “உன் தந்தை செல்வம் சேர்த்ததும் இப்படி சிரமப்பட்டுத்தான்... அதனை ஊதாரித்தனமாக நீ உருட்டிவிடுவது என்ன நியாயம்?” என்று மகான் அமைதியாகக் கூற, அவன் மனம் திருந்தினான். மகிழ்ந்தார் செல்வந்தர்.

உபதேசம் வேண்டுமா?

ஓவியம்; கே.கே.
ஓவியம்; கே.கே.

கான் ஒருவரிடம் வந்த அடியவர், “சுவாமி! நான் மனதார எந்தத் தவறும் செய்வதில்லை. பிறருக்கு எந்தக் கெடுதியும் நினைப்பதில்லை. எனது மனது தூய்மையாக உள்ளது. எனக்கும் உபதேசம் தேவையா?” என்று கேட்டார். அதற்கு அம்மகான், “மகனே! நீ எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக ஒரே இடத்தில் இரண்டு நாட்கள் உட்கார்ந்து இரு. அதன் பின்பு என்னிடம் வா. உபதேசம் தேவையா? வேண்டாமா என்று தெரிந்துவிடும்” என்றார்.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையின் 12 முக்கியமான சிறப்புகளை தெரிந்துக்கொள்வோம்!
ஓவியம்; கே.கே.

மகான் சொன்னபடி இரண்டு நாட்கள் வேலை எதும் செய்யாமல் ஒரு மரத்தடியில் உட்கார்ந்துவிட்டு வந்தார் அந்த அடியவர். அவரைக் கண்ட மகான், “மகனே! உன் ஆடைகளில் ஏன் இவ்வளவு தூசு படிந்துள்ளது? உன் முகத்திலும் அழுக்குப் படிந்துக் கிடப்பதைப் பார். எந்த வேலையும் செய்யாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கும்போதே உன் மேல் இவ்வளவு மாசு படிந்திருக்கும் போது, மனதிலும் அப்படித்தான் அழுக்குப் படிந்துவிடும். அதற்கு நல்ல எண்ணங்களை மனதுக்குள் எப்போதும் நிரம்பிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்குத்தான் இங்கு உபதேம் தந்துகொண்டிருக்கிறேன்” என்றார் மகான். அதைக் கேட்ட அடியவர் மனம் திருந்தி சீடரானார்.

- மாலா பழனிராஜ், சென்னை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com