
-பொன்னம்மாள்
துரோணருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் சாந்தா. துரோணர் வாழ்ந்த ஊரில் திருக்குலத்து அடியார் ஒருவர் இருந்தார். அவர் பெயர் பக்த சேதனா. செருப்பு தைப்பது அவரது தொழில் என்றாலும், மிகச் சிறந்த விஷ்ணு பக்தர். அவரது மனைவி காந்தா. இறைவன் சேவைக்காகவே வாய்த்ததாக எண்ணி தமது மகளுக்கு, 'சேவா' என்று பெயரிட்டு வளர்த்தார் சேதனா
துரோணர், மகா விஷ்ணுவை மலர்களால் அர்ச்சிப்பதைப் போலவே, தமது இல்லத்திலும் பெருமாளுக்கு மலர் அர்ச்சனை செய்ய வேண்டும் என விரும்பினாள் சேவா. அவளிடம், துரோணருக்கு ஒரு ஜோடி செருப்பைத் தைத்துக்கொடுத்து, அதற்கு பதில் அவர்கள் வீட்டிலிருந்து பூக்கள் வாங்கி வரச் சொன்னார் சேதனா.
செருப்பைக் கொடுத்து, பூக்கள் வாங்கி வர துரோணர் வீட்டுக்குச் சென்ற சேவாவிடம், தமது வீட்டு பெருமையைப் பேசி எள்ளி நகையாடினாள். சாந்தா. அவளுக்கு பதில் கூறும்விதமாக, "எங்கள் வீட்டு நிவேதனத்தைச் சாப்பிட பகவான் நேரில் வருவார்" என்று கூறினாள் சேவா. "பகவான் உங்களோடு சாப்பிடுகிறாரா? பொய்" என்றாள் சாந்தா. "என்னுடன் வா காட்டுகிறேன்” என்று அவளை தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று காட்டினாள் சேவா.