சூட்சும ரூபத்தில் அருளும் சித்தர்கள்; மகான்களின் ஜீவ சமாதிகள்!

சித்தர்கள்
சித்தர்கள்
1.

சூட்சுமமாக இருந்து நம்மை காக்கும் மகான்களின் ஜீவ சமாதிகளை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாக உள்ளது. எந்த மகான் எந்தக் கடவுளை வழிபட்டாரோ அந்த தெய்வத்தின் சிலை அவரது ஜீவ சமாதியின் மீதோ அல்லது அருகிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகிறது.

பெரும்பாலான மகான்களும், சித்தர்களும் சிவனை வழிபட்டு இருக்கின்றனர்.  அபூர்வமாக சிலர் விநாயகரையும், முருகக் கடவுளையும், சக்தியையும் வழிபட்டு இருக்கின்றனர். அதனால் அந்தந்த ஜீவ சமாதிகளின் மீது அல்லது அருகில் அவர்களுக்கு உரிய தெய்வங்கள் வைக்கப்பட்டு வணங்கப்படுகின்றன.

சித்தர் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள். சித்தத்தை சிவன் பால் வைத்தவர்கள் சித்தர்கள். அப்படிப்பட்ட மகிமை நிறைந்த சித்தர்களின்  ஜீவசமாதியை தரிசித்து வணங்க உடலும், மனமும் புத்துணர்வு கொள்வதுடன் எண்ணியது கிட்டும் என்கின்றனர். எட்டு வகையான சித்திகளை (அஷ்டமா சித்திகள்) கற்றுத் தேர்ந்தவர்கள். சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்றாலே நம்மால் நல்ல அதிர்வலைகளை உணர முடியும். இறைவனை தானும் உணர்ந்து, சாமானிய மக்களும் உணர்ந்து இறைவனின் அருளைப் பெறுவதற்கு சித்தர்கள் வழிகாட்டியுள்ளனர்.

சித்தர்கள் என்றாலே நாம் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை, பழனி, சதுரகிரி மலை போன்ற இடங்கள்தான். ஆனால் பல சித்தர்களின் ஜீவ சமாதிகள் பல புகழ் பெற்ற ஆலயங்களின் சன்னதிகளிலோ அல்லது அதற்கு அருகிலோ உள்ளன. சித்தர்களை பௌர்ணமி அல்லது அமாவாசை தினங்களில் வழிபடுவதும், தியானம் செய்வதும் சிறந்த பலனைத் தரும்.

2. 1. கஞ்சமலை சித்தர், சென்னிமலை சித்தர்:

கஞ்சமலை சித்தர், சென்னிமலை சித்தர்
கஞ்சமலை சித்தர், சென்னிமலை சித்தர்

பச்சிலை, மல்லிகை, வெற்றிலை, தாமரை பூக்களுடன் வெள்ளைத் துணி வைத்து வழிபட சுக்கிர தோஷம் நீங்கும். இவரின் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் கோவில்களில் உள்ளது. சென்னிமலை சித்தரின் சமாதி கேரளத்தில் உள்ள நாங்குனாசேரியில் அமைந்துள்ளது.

3. 2. மச்சமுனி சித்தர்: 

மச்சமுனி சித்தர்
மச்சமுனி சித்தர்

திருப்பரங்குன்றத்தில் மலை மீது இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலில்தான் மச்ச முனியின் ஜீவசமாதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்பக்கம் உள்ள சுனை நீரில் மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஐதீகம். பக்தர்கள் தயிரை வாங்கி சுனை நீரில் விடுகிறார்கள் அப்போது மச்சமுனி சித்தர் மீன் வடிவில் வந்து தயிரை ஏற்றுக்கொண்டு நல்லருள் புரிவார் என்பது நம்பிக்கை.

4. 3. பாம்பாட்டி சித்தர் மற்றும் அழுகணி சித்தர்:

பாம்பாட்டி சித்தர் மற்றும் அழுகணி சித்தர்
பாம்பாட்டி சித்தர் மற்றும் அழுகணி சித்தர்

அழுகணி சித்தரையும், பாம்பாட்டி சித்தரையும் துளசி, தாழம்பூ, தாமரைப் பூக்களுடன் கருப்பு துணி வைத்து வழிபட ராகு தோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது. பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி மருதமலையில் உள்ளது. நாகப்பட்டினத்தில் அழுகணி சித்தரின் சமாதி உள்ளது.

5. 4. காகபுஜண்டர், அகப்பேய் சித்தர்: 

காகபுஜண்டர், அகப்பேய் சித்தர்:
காகபுஜண்டர், அகப்பேய் சித்தர்:

துளசி மரு, வில்வம், சங்கு பூக்களுடன் மஞ்சள் துணி வைத்து வழிபட குரு (வியாழன்) தோஷம் நீங்கும். திருச்சி உறையூரில் காகபுஜண்டருடைய ஜீவசமாதி அமைந்துள்ளது. அகப்பேய் சித்தரின் சமாதி திருவையாறிலும் எட்டுக்குடியிலும் உள்ளது.

6. 5. இடைக்காடர், வள்ளலார்: 

இடைக்காடர், வள்ளலார்
இடைக்காடர், வள்ளலார்

புதன்கிழமைகளில் மல்லிகை, விபூதி, ஜாதிப்பூக்களுடன் பச்சை கலர் துணி வைத்து வழிபட புதன் தோஷம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. திருவண்ணாமலையில் இடைக்காட சித்தருடைய ஜீவசமாதி உள்ளது. வடலூரில் வள்ளலாரின் ஜீவசமாதி உள்ளது.

7. 6. போகர், புலிப்பாணி சித்தர்: 

போகர், புலிப்பாணி சித்தர்
போகர், புலிப்பாணி சித்தர்

செவ்வாய்க்கிழமைகளில் வில்வம், சாமந்தி, அரளி, ஜாதி பூக்களுடன் சிவப்பு துணி வைத்து வழிபட திருமண தடை, நிலத்தகராறு, செவ்வாய் தோஷம் போன்றவை நீங்கும். போகருக்கு பழனி மலை முருகன் கோவிலில் சமாதி உள்ளது. பழனிக்கு அருகிலுள்ள வைகாவூர் எனும் இடத்தில் புலிப்பாணி சித்தருக்கு சமாதி அமைந்துள்ளது.

8. 7. சிவவாக்கிய சித்தர், உரோமச முனிவர்: 

சிவவாக்கிய சித்தர், உரோமச முனிவர்:
சிவவாக்கிய சித்தர், உரோமச முனிவர்:

திங்கட்கிழமைகளில் சங்கு, மல்லிகை பூக்களுடன் வெள்ளை துணி வைத்து வழிபட சந்திர தோஷம், மனோ வியாதி தீரும் என்பது நம்பிக்கை. சிவவாக்கிய சித்தருடைய ஜீவசமாதி கும்பகோணத்தில் அமைந்துள்ளது. பழனி மலை முருகன் கோவிலில் உரோமச சித்தருக்கென்று தனி சமாதி உள்ளது.

9. 8. கமலமுனி சித்தர், திருமூலர் :

கமலமுனி சித்தர், திருமூலர் சித்தர்
கமலமுனி சித்தர், திருமூலர் சித்தர்

கமலமுனி சித்தர் போகரிடம் சீடனாய் இருந்து யோகம் பயின்றவர். பன்னிரு திருமுறைகளில் திருமூலர் எழுதிய திருமந்திரம் 10ம் திருமுறையாகும். 3000 ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் திருமூலர். திருவாரூரில் கமலமுனி சித்தருக்கு ஜீவசமாதி அமைந்துள்ளது. திருமூலருக்கோ சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது.

10. 9. கருவூரார், கபிலர்: 

கருவூரார், கபிலர்:
கருவூரார், கபிலர்:

இவர்களுக்கு மல்லிகை மற்றும் அனைத்து பூக்களுடன் கருநீலக் கலரில் துணி வைத்து வழிபட பிரம்மஹத்தி, சனி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இவருடைய ஜீவசமாதி கரூரில் உள்ளது தஞ்சாவூர் பெரிய கோவிலில் இவரது ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் அமைந்துள்ளது.

11. 10. குதம்பை சித்தர், சட்டை முனி சித்தர்: 

குதம்பை சித்தர், சட்டை முனி சித்தர்
குதம்பை சித்தர், சட்டை முனி சித்தர்

வெள்ளிக்கிழமைகளில் ஜாதிப்பூ, விருட்சிப் பூ, வில்வம், துளசியுடன் பல வண்ணங்களில் அமைந்த துணி வைத்து குதம்பை சித்தர் மற்றும் சட்டை முனி சித்தரை வழிபட கேது தோஷம் நீங்குமாம். சட்டை முனி சித்தரின் ஜீவ சமாதி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது. மாயவரத்தில் குதம்பை சித்தருடைய ஜீவசமாதி உள்ளது.

12. 11. பட்டினத்தார், கடுவெளி சித்தர்:

பட்டினத்தார், கடுவெளி சித்தர்
பட்டினத்தார், கடுவெளி சித்தர்

பட்டினத்தார் ஜீவசமாதி அடைந்த இடம் திருவொற்றியூர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள கடுவெளியில் சில காலம் தங்கி சில சித்துக்களை புரிந்து பின்னர் காஞ்சிபுரம் சென்று கடுவெளியியில் இறைவனை பூஜித்தவர். ஞாயிற்றுக்கிழமைகளில் மரிக்கொழுந்து, சம்பங்கி பூக்களுடன் ரோஸ் கலரில் துணி வைத்து வழிபட சூரிய தோஷம், பித்ரு சாபம் நீங்கும் என்பது நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com