

சித்தர்களின் ஜீவ சமாதிகள் பற்றிய தொடர் 'ஆசி பெறலாம் வாங்க' நவம்பர் 05, 2011 ‘தீபம்’ இதழில் தொடங்கி 16 அத்தியாயங்களுடன் நிறைவுற்றது.
இத்தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
ஆன்மிக பிரதேசம் மிகப் பெரியது. அதில் சென்னையில் மட்டுமுள்ள சித்தர்களின் ஜீவ சமாதியைப் பற்றி எழுத, தீபம் ஆசிரியர் குழுவிலிருந்து உத்தரவு வந்ததும் குழம்பினேன், திருவிழாவில் விரும்பித் தொலைந்தவனைப்போல்.
தகவல்களை எப்படி பெறுவது? எங்கிருந்து தொடங்குவது? பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றியத் தகவல்களைக்கூட அறியாமலே பரபரப்பாய் வாழும் சென்னைவாசிகளுக்கு, அவர்களிடையே இருக்கும் ஜீவ சமாதியைத் தெரிந்திருக்க வாய்ப்புண்டா? என்ற கேள்விகளோடு, ஆன்மிகத் தேடல் உள்ள ஜோதிடரும் நண்பருமான மகேஷுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
மறுமுனையில் மகேஷ், "நண்பா.. இது சித்த உத்தரவு. உங்களுக்குத் தேவையான தகவல்கள் உங்களைத் தானே தேடிவரும். இப்போது நான் ஸ்ரீலஸ்ரீ பாடகச்சேரி சித்தர் ஸ்ரீராமலிங்க சுவாமிகளின் குருபூஜைக்காக அவரின் ஜீவ சமாதியின் முன்தான் இருக்கிறேன். உங்கள் தொடரை இங்கிருந்தே தொடங்கலாம். இது நல்ல சகுனம்" என்றார். எனக்கு ஆச்சர்யம். ஏதோ ஒரு சித்த சக்திதான் என்னை வழி நடத்துவதாய் உணர்ந்தேன்.