

சித்தர்களின் ஜீவ சமாதிகள் பற்றிய தொடர். 'ஆசி பெறலாம் வாங்க' நவம்பர் 05, 2011 ‘தீபம்’ இதழில் தொடங்கி 16 அத்தியாயங்களுடன் நிறைவுற்றது.
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
தேவாரத்தில் 'சித்தி' என்ற சொல், 'இறைவனை அடைவதில் வெற்றி' என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவன் தன்னுள்ளே சிவத்தை உணர்வதை, திருமந்திரம், 'சித்திக்கு வித்து சிவபரம் தானாதல்' என்கிறது. இந்த உணர்தலில் வெற்றிப் பெற்றவர்களே சித்தர்கள்.
காரியம் என்ற சொல் கரம் என்ற சொல்லிலிருந்து பிறந்தது. கரம் என்றதும் நினைவுக்கு வருபவர் – கர பாத்திரம் சிவப்பிரகாச சுவாமிகள்.