

சித்தர்களின் ஜீவ சமாதிகள் பற்றிய தொடர். 'ஆசி பெறலாம் வாங்க' நவம்பர் 05, 2011 ‘தீபம்’ இதழில் தொடங்கி 16 அத்தியாயங்களுடன் நிறைவுற்றது.
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
எல்லாவற்றையும் துறந்த சித்தர்கள், அம்மாவின் நினைவுகளை மட்டும் துறக்கவியலாமல், அம்மாவின் இறப்பில் கதறிக் கதறி அழுத சாட்சியங்கள் உண்டு. உதாரணம் பட்டினத்தார். பூத்துக் குலுங்கும் நமது பசுமைக்கு அம்மா எனும் ஆணிவேர்தான் ஆதாரம். அம்மா என்பது இறைவனின் ஜெராக்ஸ்; இனிப்பின் அவதாரம். அந்த அம்மா என்ற சொல்லோடு சக்கரையும் சேர்த்துக்கொண்டால் சந்தோஷத்துக்கு பஞ்சமேது? 'ஸ்ரீ சக்கரை அம்மா' என்ற வசிய வார்த்தைக்கு உரிய சித்தரை சமீபத்தில் தரிசிக்க வாய்த்தது.