

சித்தர்களின் ஜீவ சமாதிகள் பற்றிய தொடர் 'ஆசி பெறலாம் வாங்க' நவம்பர் 05, 2011 ‘தீபம்’ இதழில் தொடங்கி 16 அத்தியாயங்களுடன் நிறைவுற்றது.
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
முக்தியை நான்கு விதமாக வகுத்துள்ளனர் ஆன்றோர். இறை உலகில் வாழும் நிலையை 'சாலோக்கியம்' என்றும், இறைவனுக்கு அருகில் வாழும் நிலையை ‘சாமீப்பியம்' என்றும், இறைவனின் வடிவத்தை பெறக்கூடியதை 'சாரூப்பியம்' என்றும், இறைவனோடு ஒன்றிணைந்து நிற்கும் நிலையை 'சாயுஜ்யம்' என்றும் குறிப்பிடுகின்றனர். சித்தர்கள் இந்த நாலாவது நிலையை எட்டிவிட்டவர்கள்.
சித்தர்களுக்கு எல்லாம் ஆதியாக விளங்கும் மகேசுவரனே ஒரு சித்தன்தானே. திருநாரையூரில் (சீத்தீச்சரம்) எழுந்தருளியிருக்கும் இறைவன் சித்தன் என்றே அழைக்கப்படுகிறார். அந்த மகேசுவரன், உலகுக்கு கருணை செய்வதற்காகவே லிங்க வடிவில் விளங்குகிறார். அதைச் சொல்லும்,
அனுக்ரஹாய லோகானாம்
லிங்கானிச மகேச்வர
என்ற வரிகளின் சத்யத்தை உணர்ந்து, லிங்க வடிவங்களைத்