சித்தர்கள் உலா வரும் சிவன்மலை!

சிவன்மலை...
சிவன்மலை...

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயத்திற்கு அருகில் உள்ள சிவன் மலையில் அமைந்துள்ளது சுப்பிரமணியர் ஆலயம். தொரட்டி மரம் தலவிருட்சமாக அமைந்துள்ளது. 

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற ஸ்தலம் இது. ‌ பதினெண் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் இந்த மலையில் தங்கி இருந்து முருகப்பெருமானுக்கு கோவில் எழுப்பி வழிபட்டார். அவர் நினைவாக இந்த மலைக்கு சிவன்மலை என பெயர் வந்தது.

தல வரலாறு:

சிவன் திரிபுரத்தை அழிக்க மேரு மலையை வில்லாக பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு பகுதிதான் சிவன்மலை எனப்படுகிறது. 

இது பார்வதி, அகத்தியர் ஆகியோர் சிவனை நோக்கி தவம் செய்த தலம் என்றும், வள்ளி மலைக்குச் சென்று வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான் வள்ளியுடன் இங்கு குடி கொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது.

மூலவர் சுப்ரமணியர் வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். சிவன்மலை மீதுள்ள கோயிலுக்கு செல்ல 496 படிகள் கொண்ட மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

சுப்பிரமணியர்...
சுப்பிரமணியர்...

இக்கோவில் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலின் சிறப்பம்சம் ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். 

முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட வேண்டிய பொருளை கூறுவதும், அந்தப் பெட்டியில் பொருளை வைத்து பூஜை செய்யப்படுவதும் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் நியமமாகும்.

இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை பழைய பொருளே கண்ணாடி பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கும்.

மற்ற திருத்தலங்கள் போல் அல்லாது இங்கு முதல் வழிபாடு முருக பெருமானுக்குத்தான் நடைபெறும். மற்ற திருத்தலங்களில் முதல் வழிபாடு பிள்ளையாருக்கு. ஆனால் இங்கு முருகனுக்குத் தான் முதல் வழிபாடு நடைபெறுகிறது.

இங்குள்ள நவகிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானை பார்த்து நிற்கின்றன. அணையாத தீபம் ஒன்றும் எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.

சிவன் மலையில் இன்றும் ஏராளமான சித்தர்கள் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் புண்ணியம் செய்தவர்கள் கண்களில் அவ்வப்போது சித்தர்கள் புலப்படுவதாகும் கூறப்படுகிறது.

இங்கு தொரட்டி மரம் தலவிருட்சமாக அமைந்துள்ளது. தொரட்டி என்பது ஒரு வகை மரம். இது கொங்கு நாட்டுப் பகுதியில் பல கோயில்களில் தலவிருட்சமாக இறைவனோடு சேர்ந்து வணங்கப்படுகின்றது.

இதையும் படியுங்கள்:
உடலுக்கு ஊட்டம் தரும் 7 தாவர பால் வகைகள்!
சிவன்மலை...

இது வறண்ட நிலப்பகுதியிலும் பாலைவனப் பகுதியிலும் வளரக்கூடியது. முட்கள் நிறைந்த மரம் இது. இதன் இலைகளிலும் முட்கள் உண்டு. பழங்களும் முட்கள் சூழ்ந்து இனிப்பும் கசப்பும் சேர்ந்து காணப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொளிங்குன்றம் கொடுங்க நாதர் கோவில், கோயம்புத்தூர் மாவட்டம் புதூர் கோட்டை அருள்மிகு தண்டுமாரியம்மன் கோவில், கோட்டைக்கரை அம்மன் கோவில் ஆகிய இடங்களில் தொரட்டி மரமே தல விருட்சமாக அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com