சிவபெருமானை போன்று நெற்றிக்கண்ணோடு அருளும் அம்பிகை திருத்தலம்!

ஸ்ரீ வளவநாதீஸ்வரர்
ஸ்ரீ வளவநாதீஸ்வரர்
Published on

நெற்றிக்கண் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சிவபெருமான்தான். காரணம், சிவபெருமானுக்கு மட்டுமே நெற்றிக்கண் உண்டு என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், அம்பாளுக்கும் நெற்றிக்கண் உண்டு என்று சொன்னால் ஆச்சரியமாகத்தானே இருக்கும்.

வேலூர் - சென்னை நெடுஞ்சாலையில்  24 கி.மீ. தொலைவிலுள்ள ஆற்காட்டிலிருந்து பிரியும் சாலையில் 17 கி.மீ. சென்றால் வளையாத்தூரில் உள்ளது வளவநாதீஸ்வரர்  சிவன் கோயில். இக்கோயிலில் அருளும் அம்பிகையின் திருநாமம் பெரியநாயகி. இத்தல இறைவன் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து அருள்பாலிப்பதால் இப்பெயர் ஏற்பட்டதாக ஐதீகம். முற்காலத்தில் இப்பகுதியில், விவசாயம் செழித்து மக்கள் வளத்துடன் வாழ்ந்ததால் அவருக்கு, 'வளவநாதீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.

அருள்மிகு பெரியநாயகி அம்பாள்
அருள்மிகு பெரியநாயகி அம்பாள்

கோயிலில் நுழைந்ததும் நின்ற நிலையில், நான்கு திருக்கரங்களுடன் எழுந்தருளியிருக்கும் பெரியநாயகி அம்பாளை தரிசிக்கலாம். இந்த அம்பாளின் நெற்றியில் சிவனுக்கு உள்ளதுபோல் நெற்றிக்கண் உள்ளது. சிவபெருமான் சூரியன், சந்திரன் மற்றும் அக்னி என மூவரையும் கண்களாகக் கொண்டவர். சிவனின் சக்தி வடிவமே அம்பிகை என்பதால், அவளும் முக்கண் உடையவள் ஆகிறாள். இதை உணர்த்தும் விதமாக அம்பிகை, இக்கோயிலில் நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறாள்.

சிவராத்திரியன்று இரவில் இந்த அம்பிகைக்கு பூஜை உண்டு. இவளது நான்கு கரங்களிலுள்ள சுண்டு விரல்களிலும் மோதிரம் அணிந்திருப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும். இந்த அம்பாள் மாங்கல்ய வரப்பிரசாதியாகத் திகழ்கின்றாள். இந்த அம்பாளை வேண்டிக்கொண்டால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பெரியநாயகி அம்பாள் நெற்றிக்கண்ணுடன் இருப்பதால், இவளை சிவபெருமானாகவே கருதி, சிவராத்திரியன்று இரவில் பூஜை செய்கிறார்கள். இது வேறு எந்தத் தலத்திலும் பின்பற்றாத ஒரு நடைமுறையாகும்.

வளவநாதீஸ்வரர்  சிவன் கோயில்
வளவநாதீஸ்வரர் சிவன் கோயில்

வளவநாதீஸ்வரர் சதுர வடிவ பீடத்தில், இடப்புறமாக சற்றே வளைந்த நிலையில், நவாம்ச மூர்த்தியாகக் காட்சி தருவதாக ஐதீகம். இந்த ஒன்பது நிலைகளும் நவக்கிரகங்களைக் குறிப்பதாகவும் சொல்வர். இதனால், எந்த கிரகத்தால் ஏற்பட்ட தோஷத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள், தோஷ நிவர்த்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பேய், பிசாசு, காத்து கருப்பை அண்ட விடாத மரங்கள் எவை தெரியுமா?
ஸ்ரீ வளவநாதீஸ்வரர்

இத்தலத்தில் முருகன் கையில் சிவனுக்குரிய சின்முத்திரை காட்டியபடி அருள்பாலிப்பது விசேஷமாகும். மேலும், இங்குள்ள சப்த கன்னியர் பீடத்தில் அவர்களுக்குரிய வாகனங்கள் வடிக்கப்பட்டுள்ளது மேலும் ஒரு தனிச் சிறப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com