சித்தர்கள் கூறிச்சென்றுள்ள சில விசித்திரப் பரிகாரங்கள்!

சித்தர்கள் கூறிச்சென்றுள்ள சில விசித்திரப் பரிகாரங்கள்!

1. விநாயகருக்கு சுண்டைக்காய் மலர் வைத்து வழிபட, உடலைப் பற்றிய தீய சக்திகள் விலகி ஓடும்.

2. வீட்டைவிட்டு வெளியில் செல்லும்பொழுது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாகப் பார்க்க நேரிட்டாலோ, சில நாணயங்களை பூமியில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டுச் செல்ல, அந்த ஆத்மாவினால் உண்டாகும் எதிர்மறை விளைவுகள் தாக்காமல் இருக்கும்.

3. தினசரி வீட்டை விட்டுக் கிளம்பும் முன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட், தொட்டி, குளத்தைப் பார்த்துச் செல்ல, போகிற விஷயம் சுபமாய் முடியும்.

4. கொடுத்த கடன் திரும்ப வரவில்லையெனில் உங்கள் இஷ்ட தெய்வத்துக்கு 43 நாட்கள் தினசரி நீல நிற பூவை வைத்து வேண்டி வழிபட, வாராக்கடன்கள் விரைவில் வசூலாக ஆரம்பிக்கும்.

5. எதிரிகளின் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் செயல் இழந்து போவர்.

6. வெண்கடுகு, நாய்க்கடுகு, மருதாணி விதை, சாம்பிராணி, அருகம்புல், வில்வ இலை, வேப்ப இலை இவற்றை நன்றாகக் காய வைத்து துளாக்கி சம்பிராணியுடன் கலந்து வீட்டில் அடிக்கடி தூபம் போட, வீட்டில் நிம்மதியின்மை, சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், தூக்கமின்மை, தம்பதியினருக்கு மத்தியில் வாக்குவாதங்கள், திருஷ்டி, எதிர்மறை சக்திகள் போன்ற அனைத்து பிரச்னைகளும் விலகும். வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்கு விசேஷமானது. மருதாணி விதை திருமகளுக்குரியது. அறுகம்புல் விநாயகருக்கு உரியது. வில்வம், வேம்பு முறையே சிவன் மற்றும் சக்திக்குரியது. மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பதாக ஐதீகம்.

7. பசு பால் தரும் நிலையில் இருக்கும்போது செய்வதுதான் சிறந்த தானமாகும். சிலர் பசுவுடன் காளையையும் சேர்த்து தானம் அளிப்பார்கள். இது கூடுதல் பலனைத் தருவதாகும்.

8. ஒரு பசு முதல் கன்று ஈன்றதும், அதை, ‘தேனு’ என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதை, ‘கோ’ என்றழைப்பர். எனவே, இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்குப் பயன்படுத்துவார்கள். பசுவுக்கு தினமும் பூஜை செய்வது, பராசக்திக்கு பூஜை செய்வதற்குச் சமமாகும்.

9. முதல் ஆண் குழந்தையின் அரைஞாண் கயிற்றை பணப்பெட்டியில் வைக்க, செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை.

10. வலம்புரிச் சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது. மாமிச உணவருந்திய தினங்களிலும், பெண்கள் வீட்டுக்கு விலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக்கூடாது என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com