பெண்கள் அவசியம் அறிய வேண்டிய சில ஆன்மிகத் தகவல்கள்!

பெண்கள் அவசியம் அறிய வேண்டிய சில ஆன்மிகத் தகவல்கள்!
Published on

1. வீட்டு வாசலில் கோலமிடும்போது தெற்கே பார்த்து நின்று கொண்டு கோலமிடக் கூடாது.

2. திருமணமான பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு அல்லது மூன்று விரல்களில் மெட்டி அணியக் கூடாது. இப்படி அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு ஏற்படும்.

3. கர்ப்பமான பெண்கள் மிகவும் உக்ர தோற்றத்துடன் காட்சி தரும் தேவதைகள் உள்ள கோயிலுக்குப் போகக் கூடாது.

4. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி நின்று குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக் கொள்ள வேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் குங்குமம் இட்டுக் கொள்ளக் கூடாது.

5. அமாவாசை, திவசம் போன்ற நாட்களில் வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது.

6. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.

7. பெண்கள் கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்யக் கூடாது. காரணம், பெண்களின் மார்பு பகுதி பூமியின் மீது படக்கூடாது என்பது ஐதீகம்.

8. கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது.

9. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டுக் கொண்டு நடக்கக் கூடாது.

10. கோயிலில் பெண்கள் தெய்வத்தை வணங்கும் பொழுது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும்.

11. தலை குளிக்கும்பொழுது சுமங்கலிப் பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.

12. வெள்ளிக்கிழமைகள் மற்றும் விசேஷ நாட்களில் வீட்டு சமையலில் பாகற்காயை சமைக்கக் கூடாது. இப்படிச் செய்வதால் பாவம் வந்து சேரும் என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com