

ஒரு சீடனுக்கு கடைசி தீட்சை அளிக்கப்படவுள்ளது. குரு வழியில் வைத்த எல்லா தேர்வுகளிலும் சீடன் தேறிவிட்டான். இப்போது கடைசி தீட்சை. அதிலும் தேறிவிட்டால், அவன் ஞானமடைந்தவன் என அறிவிக்கப்படுவான்.
"உன்னுடைய கடைசி தீட்சை மிகவும் மறைமுகமான ஒரு வழியிலேயே அளிக்கப்படும். அதற்கு நீ இதனை செய்ய வேண்டும்" என கூறினார் குரு. சீடன் குருவின் காலை தொட்டு வணங்கி, "நான் தயாராக இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்" என்றான் சீடன்.
குரு, "நீ அரசரிடம் செல்லவேண்டும். மற்றும் அதிகாலையில் செல்லவேண்டும். அரசரை பார்க்கும் முதல் ஆளாய் நீ இருக்கவேண்டும். ஏனெனில் அரசருக்கு ஒரு பழக்கம் உள்ளது. முதலில் வருபவர்கள் யாராக இருந்தாலும், வருபவர் எதை கேட்டாலும், அரசர் கொடுத்துவிடுவார். ஆனால் நாடு செல்வ செழிப்போடு இருப்பதால் யாரும் போவதில்லை. ஆனால் தவறவிட்டுவிடாதே – மிகவும் சீக்கிரமாகவே செல். சூரியன் உதயமாகும்போது, அரசர் தோட்டத்திற்குள் நுழைவார். அங்கு இரு. அவர் 'உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்பார். உனக்கு என்ன வேண்டுமோ, அதை அவரிடம் கேள்," என கூறினார்.