

மார்க்கண்டேயர் ரிஷி பிரம்மச்சர்ய விரதத்தை கடைபிடித்து புலன்களை அடக்கி மகாவிஷ்ணுவை தியானித்து கடுந்தவம் மேற்கொண்டார். ஆறு மன்வந்த்ர காலம் இவ்வாறு தவம் செய்து வந்தார். ஏழாவது மன்வந்திரத்திலும் இதைத் தொடர்ந்த போது இந்திரன் கவலை அடைந்தான். அவர் தொடர்ந்து தவம் செய்தால் தன் இந்திரப் பதவி போய்விடும் என்று எண்ணி தேவலோகப் பெண்களை அனுப்பி அவரை மயக்கக் கூறினான். அவர்களும் தங்கள் ஆடல் பாடல் ஊடல்களினால் அவரை வீழ்த்த முயன்றனர்.