
தக்ஷிணாயண புண்ணியகாலமான ஆடி மாதத்தில் தான் பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. நாடு செழிக்க நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். காவிரி நதியை பெண்ணாக பாவித்து ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப் பெருக்கன்று முளைத்த பாலிகையை ஏந்தி ஆற்றுக்கும் செல்வார்கள். இந்த விழாவில் சிறப்பு அம்சமாக ஆற்றங்கரையில் சுமங்கலிப் பெண்கள் தாலிக்கு புது மஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வார்கள்.
ஆடிப்பெருக்கு குறித்து புராணக்கதை உண்டு.
குருக்ஷேத்திரப் போரில் முதல்நாள் பாண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப்பட்டும், பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமடைந்தது. உத்தரனும், சுவேதனும், சல்லியனாலும் பீஷ்மராலும் கொல்லப்பட்டனர். பாண்டவர் படைகள் முதல்நாள் படுதோல்வி அடைந்ததை சரிகட்ட பீஷ்மரைக் கொல்ல அணி வகுத்தனர். ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரை காத்து நின்று போரிட்டது. பீஷ்மரைக் கொல்ல சிகண்டியைப் போர்க்களத்தில் பீஷ்மருக்கு எதிராக போரிட கிருஷ்ணர் ஆலோசனை கூறினார். அவர் ஆலோசனைப்படி சிகண்டி அனுப்பப்பட்டார்.