விநோத வழிபாடு!

ஆன்மிகம்
விநோத வழிபாடு!
Published on

றைவனிடம் வேண்டுகோள்கள் வைப்பவர்கள், அதற்காக நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். தங்கள் உடல் முழுவதும், கிராமங்களில் எளிதில் கிடைக்கக்கூடிய வைக்கோல்களை ‘கயிறுபோல் திரித்துக் கட்டிக்கொண்டு, ஊர்வலமாகச் செல்லும் கிராம மக்களின் வினோத வழிபாடு குறித்தது இந்தத் தகவல்.

மதுரை மாவட்டம் வெள்ளலூரில் ஏழைகாத்த அம்மன் கோயில் உள்ளது. சக்திவாய்ந்த இந்த அம்மனுக்கு ஆண்டு தோறும் திருவிழா நடத்தப்படும். நேர்த்திக்கடன் இருக்கும் பெயர்கள் தலையில் கலயங்களை ஏந்திச் செல்வார்கள். ஆண்கள் மொத்தமாகக் கொட்டிக் கிடக்கும் வைக்கோல் களைத் தண்ணீரில் நனைத்து ‘கயிறு’ போல் திரித்து தங்கள் உடல் முழுவதும் சுற்றிக் கொள்வார்கள். முழு உடலையும் மறைத்த பிறகு, முகத்தை ‘அகோர’ முகமூடிகளைக் கொண்டு மூடியபடி ஊர்வலமாகச் செல்வார்கள்.

இந்த ஊர்வலம் 7 கி.மீ. தூரம் வரை நீளும். குறிச்சிப்பட்டி என்னும் இடத்தில் உள்ள ‘சின்ன ஏழைகாத்த அம்மன்’ கோயிலில் சென்ற பிறகு இந்த வைக்கோல் பிரிகள் கழற்றப்படும். கொளுத்தும் வெயிலில் 7 கி.மீ. நடக்கும்போது, வைக்கோல் உடல் முழுவதும் அறுத்து, ரத்தக்காயத்தை ஏற்படுத்தி விடும். இதையும் தாண்டி, தாங்கி பக்தர்கள் நடந்து சென்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள்.

பத்து வயது சிறுவர் முதல் நடக்க முடிந்த முதியவர்கள் வரை உற்சாகமாக இப்படி ஊர்வலமாகக் கிளம்பி, வழியும் ரத்தத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நேர்த்திக்கடன் செலுத்துவது, ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்தே வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com