கல்கி வார இதழில் 2006 – 2007 காலகட்டத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ‘வாரம் ஒரு பாசுரம்’ கட்டுரைகளை தொடர்ந்து 52 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
அனைத்துப் பகுதிகளையும் மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
'கடவுளின் வடிவம் என்ன, அவருக்குப் பெயர் என்ன, எப்படி கடவுளைப் பற்றி நாம் சிந்திப்பது' என்ற குழப்பம் மனித சரித்திரத்தில் ஆதி காலத்திலிருந்து உள்ளது. ஆதிமனிதன் இரவின் இருளையும் இடி, மின்னல் போன்ற சமாசாரங்களையும் கண்டு பயந்ததால் அவற்றை ஆளும் வடிவங்களாக கடவுளை எண்ணிப் பார்த்தான். தன்னிலிருந்து வேறுபட்டமைந்த மிருகங்கள் வடிவில் கடவுளை யோசித்தான். தெரிந்த மிருகங்கள், கற்பனை மிருகங்களிலிருந்து தனக்கே அதிக கைகால்கள் சக்திகள் கொடுத்து 'கடவுள்' என்றான்.