
கல்கி வார இதழில் 2006 – 2007 காலகட்டத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ‘வாரம் ஒரு பாசுரம்’ கட்டுரைகளை தொடர்ந்து 52 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
அனைத்துப் பகுதிகளையும் மேலும் சுவாரஸ்யமான பல கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
இறைவனை ஆண்பாலாகச் சொல்வதையே இப்போதெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். இறைவன் எப்படி இருப்பான்? வெள்ளையா சிவப்பா? பச்சையா கறுப்பா? என்ன அவன் உருவம்? இதை யார் அறிவார், யாரால் சொல்ல முடியும் என்று கேட்டுவிட்டு பேயாழ்வார் அருமையாக ஒரு பதில் சொல்கிறார்.
இயற்பாவின் மூன்றாம் திருவந்தாதியில் வருகிறது இந்த வெண்பா:
'நிறம் வெளிது, செய்து, பசிது, கரிது என்று
இறை உருவம் யாம் அறியோம், எண்ணில் – நிறைவுஉடைய
நா-மங்கை தானும் நலம் புகழ வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு!