
கல்கி வார இதழில் 2006 – 2007 காலகட்டத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ‘வாரம் ஒரு பாசுரம்’ கட்டுரைகளை தொடர்ந்து 52 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
அனைத்துப் பகுதிகளையும் மேலும் சுவாரஸ்யமான பல கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று இயற்கையை ஐந்தாகப் பிரித்துச்சொல்வது நம் வழக்கம். அதேபோல் குணங்களை (properties) ஒலி, தொடுகை, உருவம், சாரம், மணம் என்று ஐந்தாகப் பிரிப்பார்கள். இதில் நிலத்துக்கு ஐந்து குணங்களையும் நாம் சொல்ல முடியும். நிலத்தில் சப்தங்கள் உண்டு. அதைத் தொட்டுப் பார்க்கலாம். அதற்கு வடிவம் உண்டு. அதற்கு சாரம் Substance வாசனை உண்டு. நீருக்கு இவற்றில் நான்கு குணங்கள்தான் சொல்ல முடியும், வாசனை கிடையாது (நான் கார்ப்பரேஷன் நீரைச் சொல்லவில்லை). நெருப்புக்குச் சப்தம் உண்டு. தொட்டால் சுடும், வடிவமும் உண்டு. காற்றுக்குச் சப்தம் உண்டு. அதைத் தொட்டால் உணரலாம், வடிவம் இல்லை. ஆகாயத்தில் சப்தம் மட்டும்தான் உண்டு.