
கல்கி வார இதழில் 2006 – 2007 காலகட்டத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ‘வாரம் ஒரு பாசுரம்’ கட்டுரைகளை தொடர்ந்து 52 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
அனைத்துப் பகுதிகளையும் மேலும் சுவாரஸ்யமான பல கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
பகவத் கீதையில் பத்தாம் அத்தியாயத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் தான் யார் என்று நேரடியாக விளக்கிச் சொல்லும் பிரமிப்பூட்டும் சுலோகங்கள் உள்ளன. பகவத் கீதையை உலகின் தலை சிறந்த நூல்களில் ஒன்றாகச் சொல்வதற்கு முக்கியக் காரணம் இந்தப் பத்தாம் அத்தியாயம் இதன் கருத்துகளை நம்மாழ்வார் அப்படியே கிரகித்துக்கொண்டு அவற்றை ஒருதாய் தன் பெண் என்னென்னவோ பிதற்றுகிறாளே என்று கவலைப்படுவதாக அமைத்த பாகரங்களாக மாற்றி கீதையின் ஆழ்ந்த கருத்துகளை குறிப்பாக, பத்தாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்ட அத்தனைக் கருத்துகளையும் எளிமையாகச் சொல்லிவிடுகிறார்.