
கல்கி வார இதழில் 2006 – 2007 காலகட்டத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ‘வாரம் ஒரு பாசுரம்’ கட்டுரைகளை தொடர்ந்து 52 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
அனைத்துப் பகுதிகளையும் மேலும் சுவாரஸ்யமான பல கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
நல்ல சங்கீதம் கேட்கும்போது நம் அத்தனை செயல்பாடுகளும் நின்று போகக்கூடிய ஓர் அமானுஷ்யமான அமைதியை எப்போதாவது வாழ்வில் நிச்சயம் அனுபவித்திருப்பீர்கள். ஊரெல்லாம் உறங்கி இரவின் மௌனத்தில், தூரத்தில் ஒரு குழலோசை கேட்கிறது. அதைக் கேட்டதும் மெய்மறந்து, செய்யும் காரியங்கள் அனைத்தையும் நிறுத்தி விடுகிறோம். எங்கிருந்து வருகிறது அந்தக் குழல் ஓசை? சுற்றிலும் அத்தனையும் ஸ்தம்பித்து விடுகின்றன. மரங்களில் இலை அசைவதுகூட நின்று போகிறது. மரங்களிலிருந்து தேன் தன்னிச்சையாக வடிகிறது. மலர்கள் எல்லாம் உதிர்ந்துவிடுகின்றன. மரக்கிளைகள் தாழ்கின்றன. அந்தக் கிளைகள் கைகூப்பி வணங்குவதைப் போல சேர்ந்துகொள்கின்றன.